முன்னேறத் துடிப்போர்க்கு ஏற்ற 6 தொழில், வேலைகள்!

published 1 year ago

முன்னேறத் துடிப்போர்க்கு ஏற்ற 6 தொழில், வேலைகள்!

கோவை: படித்துவிட்டு வேலை தேடுபவரா நீங்கள்..? தொழில் தொடங்கி அதன் மூலம் வருவாய் ஈட்ட முயற்சிப்பவரா நீங்கள்..?

டிஜிட்டல் காலகட்டத்தில் சிறந்த தொழில் அல்லது வேலை வாய்ப்பாக கருதப்படும் சிறந்த 6 தொழில்/வேலைகளை இந்த கட்டுரையில் தொகுத்து வழங்கியுள்ளோம்.

டியூசன்

டியூசன் செல்லாத மாணவர்களே இல்லை என்று கூறும் அளவுக்கு சிறப்பு வகுப்புகளுக்குச் செல்லும் மாணவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. எனவே நன்கு படித்து, கற்பிக்கும் திறனுடைய இளைஞர்கள் டியூசன் தொடங்கலாம், ஆரம்ப கட்டத்தில் சிறு வருவாயாக இருக்கும் இந்த தொழில், பின்னாளில் நல்ல வருவாய் கொடுக்கும். பாடத்தை கற்பித்து அதனை யூடியூபில் விடியோவாகவும் பதிவிட்டு வருவாய் ஈட்டிடலாம்.

சோசியல் மீடியா

உங்களிடம் ஒருவரை ஈர்க்கும் திறனும், நிறைய கண்டெண்ட்களும் உள்ளது என்றால் நீங்கள் முதலில் களமிறங்க வேண்டிய இடம் சமூக ஊடகங்கள் தான். யூடியூப், இன்ஸ்டாகிராம், பேஸ்புக் உள்ளிட்ட தளங்களில் உங்களது கண்டெண்டுகளை பதிவிட்டு கணிசமான வருவாய் ஈட்டலாம். ஆனால், இந்த துறையில் வருவாய் ஈட்ட கடின உழைப்பும், டிரெண்ட் குறித்த புரிதலும், மன உறுதியும், காத்திருத்தலும் மிகவும் அவசியம்.

எழுத்தாளர்

தமிழ், ஆங்கிலம் மற்ற மொழிகளில் பிழையின்றி கட்டுரைகளை எழுத தெரியுமா உங்களுக்கு? ஏகப்பட்ட நிறுவனங்கள் பகுதி நேர எழுத்தாளர்களை எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றன. ஆரம்பத்தில் குறைவான வருவாய் கிடைத்தாலும், இந்த பகுதி நேர வேலை, சில வருடங்களில் முழு நேர ஊதியத்தை உங்களுக்கு வழங்கும் அளவுக்கு வருவாய் கொடுக்கக்கூடியது.

டிசைனிங்

கிராபிக் டிசைனிங் ஓரளவு தெரிந்து வைத்திருப்பவரா நீங்கள்? உடனே ஒரு நல்ல பயிற்சி மையத்திற்குச் சென்று உங்கள் திறனை மேலும் அதிகரித்திருங்கள். கிராபிக் டிசைன் துறை தற்போது நல்ல வருவாய் ஈட்டத்தரக்கூடிய தொழிலாக உள்ளது. போட்டோ கிராபர்கள், அரசு, தனியார் நிறுவனங்கள், சினிமா துறை உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் கிராபிக் டிசைனர் வேலைக்கு மவுசு அதிகரித்து வருகிறது.
டிஜிட்டல் மார்க்கெட்டிங்

இன்றய காலகட்டத்தில் சிறு, குறு வணிகர்கள் தங்களது தொழிலை விளம்பரப்படுத்தவும், பிரபலமாக்கி வருவாய் ஈட்டவும் ஆசைப்படுகின்றனர். அவர்களுக்கு ஏற்ற களமாக இந்த டிஜிட்டல் களம் உள்ளது. டிஜிட்டல் மார்க்கெட்டிங் செய்வதற்கான ஆட்கள் அதிகம் தேவைப்படுகிறார்கள். வீட்டில் இருந்தவாறே இந்த தொழிலை வெற்றிகரமாக செய்யலாம். சமூகவலைதளங்களில் உங்கள் ஆதிக்கத்தை எப்படி செலுத்துவது என்ற அறிவும், பயிற்சியும் இதற்கு தேவையான ஒன்று.

இன்றைய காலகட்டத்தில் டிரெண்டிங்கில் இருக்கும் சில தொழில்கள் இவை. தொழில் முனைவோராக துடிக்கும் உங்கள் வீட்டு இளசுகளுக்கு செய்தியை ஷேர் செய்திடுங்கள். - நியூஸ் க்ளவுட்ஸ் குழு.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe