சென்னை, கோவை, மதுரை, புதுவையில் இந்த வார வானிலை எப்படி?

published 1 year ago

சென்னை, கோவை, மதுரை, புதுவையில் இந்த வார வானிலை எப்படி?

கோவை: சென்னை, கோவை, மதுரை மற்றும் புதுச்சேரியில் இந்த வார வானிலை முன்னறிவிப்பை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.

அதன்படி, சென்னையில் இன்றும், 17,18 தேதிகளிலும் குறைந்தபட்சம் 20 டிகியில் இருந்து அதிகபட்சமாக 31 டிகிரி வரை வெப்பம் பதிவாகும் என்றும், 19ம் தேதி முதல் 22ம் தேதி வரை குறைந்தபட்சம் 19 டிகியில் இருந்து அதிகபட்சமாக 32 டிகிரி வரை வெப்பம் பதிவாகும் என்றும், மழைக்கு வாய்ப்பு இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவையில் இன்றும் நாளையும் சில இடங்களில் 
லேசான பனிப்பொழிவு இருக்கும் என்றும், 17ம் தேதி முதல் 22ம் தேதி வரை குறைந்தபட்சம் 20 டிகியில் இருந்து அதிகபட்சமாக 32 டிகிரி வரை வெப்பம் பதிவாகும் என்றும், மழைக்கு வாய்ப்பு இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மதுரையில் இன்றும் நாளையும் சில இடங்களில் 
லேசான பனிப்பொழிவு இருக்கும் என்றும், வெப்ப நிலை 20 முதல் 32 டிகிரி வரை பதிவாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வரும் 18,19 தேதிகளில் ஒரு சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், 20ம் தேதி முதல் 22ம் தேதி வரை குறைந்தபட்சம் 20 டிகியில் இருந்து அதிகபட்சமாக 32 டிகிரி வரை வெப்பம் பதிவாகும் என்றும், மழைக்கு வாய்ப்பு இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதுவையில் இன்றும் நாளையும் சில இடங்களில் 
லேசான பனிப்பொழிவு இருக்கும் என்றும், 17ம் தேதி முதல் 22ம் தேதி வரை குறைந்தபட்சம் 21 டிகியில் இருந்து அதிகபட்சமாக 32 டிகிரி வரை வெப்பம் பதிவாகும் என்றும், மழைக்கு வாய்ப்பு இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe