கோவையில் உள்ள கோவில்களில் சாமி தரிசனம் செய்த நடிகர் சிவகார்த்திகேயன்...

published 1 year ago

கோவையில் உள்ள கோவில்களில் சாமி தரிசனம் செய்த நடிகர் சிவகார்த்திகேயன்...

கோவை: அயலான் படம் வெளியானதை முன்னிட்டு கோவையில் உள்ள கோவில்களில் நடிகர் சிவகார்த்திகேயன் சாமி தரிசனம் செய்தார்.

ஆர்.டி.ராஜா, கொட்டபாடி ஜே.ராஜேஷ் தயாரிப்பில், இயக்குனர் ஆர்.ரவிக்குமார் இயக்கத்தில் நடிகர்கள் சிவகார்த்திகேயன்,ரகுல் பிரீத் சிங் ஆகியோரின் நடிப்பில் உருவாகி உள்ள படம் அயலான்.இந்த படத்துக்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைத்துள்ளார்.

ஜனவரி 12ஆம் தேதி வெளிவந்த அயாலான் திரைப்படம் தமிழகம் முழுவதும் திரையரங்குகளில் திரையிடப்பட்டு வருகிறது. இதனிடையே படம் வெற்றி பெற்றதை தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன் கோவை உக்கடம் பகுதியில் உள்ள ராமர் கோவில் மற்றும் பேரூர் பகுதியில் உள்ள பட்டீஸ்வரர் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.

மேலும் அங்கு வந்த பக்தர்களுடன் செல்பியும் எடுத்துக் கொண்டார்.தொடர்ந்து அயலான் படத்தை இயக்கிய திருப்பூரைச் சார்ந்த ஆர்.ரவிக்குமார் இல்லத்திற்கு புறப்பட்டார். சாமி தரிசனம் போது நடிகர் சிவகார்த்திகேயன் ரசிகர் மன்ற கோவை மாவட்ட தலைவர் வினோத் உடனிருந்தார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe