கோவையில் மத நல்லிணக்க நிகழ்ச்சி

published 1 year ago

கோவையில் மத நல்லிணக்க நிகழ்ச்சி

கோவை

மதநல்லிணக்கத்தை போற்றும் வகையில் கோவையில் நடைபெற்ற குருநானக் ஜெயந்தி விழா..சீக்கியர்களின் நிகழ்வில் இந்து,முஸ்லீம் உள்ளிட்ட அனைத்து மத தலைவர்கள் கலந்து கொண்டு சிறப்பு சேர்த்தனர் 

சீக்கிய மதத்தின் முக்கிய விழாவாக கொண்டாப்படும் குரு நானக் ஜெயந்தி விழா கோவை பூமார்க்கெட் பகுதியில் உள்ள   குருநானக் சிங் சங்க வளாகத்தில் நடைபெற்றது.. சீக்கிய மதத்தினரின் முக்கிய விழாவாக கருதப்படும் இதில் மத நல்லிணக்கத்தை போற்றும் வகையில் இந்து,முஸ்லீம் என பல்வேறு மதத்தினரும் கலந்து கொண்டனர்.

குருநானக் சிங் சங்கத்தின் தலைவர் குர்பிரீத் சிங்,உறுப்பினர் டோனி சிங் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற,இதில்,தொழிலாளர் நீதிமன்ற நடுவர் அருணாச்சலம், பல்சமய நல்லுறவு இயக்கத்தின் தலைவர் முகம்மது ரபி,சி.ஆர்.பி.எஃப். ஐ.ஜி.அஜய் பர்தன்,கமாண்டன்ட் ராஜேஷ்,ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதில் பேசிய பல்சமய நல்லுறவு இயக்கத்தின் தலைவர் முகம்மது ரபி, ,பல சமயத்தினரும் கோவிலிலோ,கிறிஸ்தவ ஆலயத்திலோ,பள்ளிவாசல்களிலோ தனித்தனியாக சென்று  வழிபட்டாலும்,வெளியில் அனைவரும் இந்தியர்களே என தெரிவித்தார்.எனவே  மதங்களை தாண்டி அனைத்து மத நிகழ்வுகளிலும் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என கூறினார்..நிகழ்ச்சியில் பேரூர் உமாபதி தம்புரான்,அப்துல் ரஹ்மான் ஹஜ்ரத்,முகம்மது இஸ்மாயி்ல்,ஜீவசாந்தி சலீம்,ஜெரீனா பேகம்,கவிஞர் அன்வர் பாட்சா,சீனிவாசன், முகம்மது அலி,அபுதாகீர்,சம்பத் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe