பெண்களே...! கோவையில் இரவு நேர மாரத்தானுக்கு ரெடியாகுங்க!

published 1 year ago

பெண்களே...! கோவையில் இரவு நேர மாரத்தானுக்கு ரெடியாகுங்க!

கோவை: 2 வது முறையாக ஜெம் அறக்கட்டளை சார்பில் நடத்தப்படும் பெண்களுக்கான இரவு நேர மாரத்தான் போட்டியின் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜெம் அறக்கட்டளை சார்பில் பெண்களின் ஆரோக்கியத்தை மையமாகக் கொண்டும் பெண்களுக்கு வயிற்று பகுதி, கர்ப்பப்பை பகுதியில் வருகின்ற புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக இரவு நேர மாரத்தான் போட்டி நடத்தப்படுகிறது.

கடந்த ஆண்டு இந்த போட்டி துவங்கப்பட்டது.  இந்நிலையில் இரண்டாவது முறையாக இந்த ஆண்டு வருகின்ற பிப்ரவரி 17ஆம் தேதி இரவு நேர மாரத்தான் போட்டி நடத்தப்பட உள்ளது.

இதில் தமிழகம் முழுவதும் இருந்து பெண்கள் பங்கேற்பர்.

இந்நிலையில் இப்போட்டிக்கான ("T-Shirt") இன்று  வெளியிடப்பட்டது.

இதனை கோவை மாநகர காவல் ஆணையாளர்  பாலகிருஷ்ணன் ஜெம் மருத்துவமனை அரங்கில் வெளியிட்டார்.

இந்நிகழ்வில் உரையாற்றிய காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன்,
பெண்கள் அவர்களது வீட்டில் உள்ளவர்களை பார்த்து கொள்வது போல் அவர்களை பார்த்து கொள்வதில்லை எனவும் இப்படிப்பட்ட சூழலில் நோய்தடுப்பிற்க்காக உடல் ஆரோக்கியம் மிகவும் முக்கியம் என்றார். இந்நிலையில் இப்படியான போட்டிகள் அவர்களின் அவர்களுக்கு ஆரோக்கியத்தை அளிக்கும் எனவும் மன நிம்மதியை அளிக்கும் எனவும் தெரிவித்தார்.

கோவையில் பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்ததால் குற்ற சம்பவங்கள் குறைந்துள்ளதாக தெரிவித்தார்.

மேலும் கொடூர குற்றங்களான கொலை வழக்குகள் கடந்த 10 ஆண்டுகளாக 30% என இருந்த நிலையில் தற்போது 22% ஆக குறைந்துள்ளது என்றார். இந்த பலன் குறிப்பாக பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் சென்று சேர வேண்டும் என இவ்வாறு  கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.

மேலும் ஜெம் மருத்துவமனை தலைவர் டாக்டர். பழனிவேலு அவர்கள் ஜெம் அறக்கட்டளை - கோவை மாநகர காவல் மற்றும் தமிழ்நாடு அத்லட்டிக் அசோசியேஷன் அங்கீகாரத்தின் மூலம் வருகின்ற பிப்ரவரி 17"ஆம் தேதி பெண்களுக்கான மாரத்தான் போட்டி, மற்றும் இதர நிகழ்ச்சிகள் நடத்த உள்ளதாகவும்

இது வ.உ.சி மைதானத்தில் நடைபெற உள்ளதாகவும், இது தமிழகத்தில் இரண்டாம் முறையாக இரவு நேரத்தில் நடைபெறுகின்ற மாரத்தான் போட்டி என தெரிவித்தார்.  

இதில் 5000"க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும்  ("3,5,10") கிமீ தூரம் மாரத்தான் போட்டி நடத்தப்பட உள்ளதாகவும், பெண்களின் ஆரோக்கியத்தை மையமாக கொண்டு இந்த மாரத்தான் போட்டி நடத்துவதாகவும் குறிப்பாக பெண்களுக்கு வயிற்றுப்பகுதி, கர்ப்பப்பை பகுதியில் ஏற்படும் புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த இந்த மாரத்தான் போட்டி நடத்தப்படுவதாக
தெரிவித்தார்.

மேலும் அன்றைய தினம் நடைபெறுகின்ற நிகழ்ச்சியில் பெண்களுக்கான சத்துள்ள உணவுகள், யோகா பயிற்சிகள் ஆகியவை எடுத்துக் கூறப்பட்ட உள்ளதாகவும் கலை நிகழ்ச்சிகள் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் ஜெம் மருத்துவமனை தரப்பில் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த ("T-Shirt") வெளியீட்டு நிகழ்வில் ஜெம் மருத்துவமனை தலைவர் டாக்டர். பழனிவேல், டாக்டர். பிரவீன் ராஜ் தலைமை செயல் அதிகாரி, திருமதி. பிரபா பிரவீன்ராஜ் இணை நிர்வாக இயக்குனர் உட்பட ஜெம் அறக்கட்டளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இதில் பங்கேற்க விருப்பமுள்ள பெண்கள்
www.coimbatorewomensmarathon.com என்ற தளத்தில் பதிவு செய்யலாம்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe