கோவையில் வாகனத்தை நிறுத்திய போலீசுக்கு அடி.. மூவர் கைது..

published 1 year ago

கோவையில் வாகனத்தை நிறுத்திய போலீசுக்கு அடி.. மூவர் கைது..

கோவை:  கோவையில் வாகனத் தணிக்கைக்காக இருசக்கர வாகனம் ஒன்றை நிறுத்திய போக்குவரத்து போலீசை தாக்கிய மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கோவை ஆர்.எஸ்.புரம் போக்குவரத்து போலீசில் முதல் நிலைக் காவலராக பணியாற்றி வருபவர் ஆனந்த். இவர் மேட்டுப்பாளையம் சாலையில் நேற்று சக போலீசார் உடன் இணைந்து வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தார்.

அப்போது அவ்வழியாக இரு சக்கர வாகனம் ஒன்றில் மூன்று பேர் வந்தனர். அவர்களை தடுத்து நிறுத்திய ஆனந்த் இருசக்கர வாகனத்தில் மூன்று பேர் பயணித்ததற்கு அபராத தொகையை கட்ட கூறினார்

இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் ஆனந்தை தாக்கியுள்ளனர். இதுகுறித்த புகாரின் பேரில் சாய்பாபா காலனி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று போக்குவரத்து போலீசை தாக்கிய செல்வபுரம் பகுதியைச் சேர்ந்த அப்துல் கலாம் சாகுல் ஹமீத், ஹபீப் அலி, அலாவுதீன் முகமது ஹுசைன் ஆகிய மூன்று பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe