மருதமலையில் தைபூசத்தை முன்னிட்டு நடைபெற்ற திருக்கல்யாண உற்சவம்...

published 1 year ago

மருதமலையில் தைபூசத்தை முன்னிட்டு நடைபெற்ற திருக்கல்யாண உற்சவம்...

கோவை: முருகனின் ஏழாம் படை வீடு என அழைக்கப்படும் மருதமலை சுப்பிரமணியசுவாமி திருக்கோவில் தைப்பூசத்தை முன்னிட்டு சுவாமிக்கு திருக்கல்யாணம் உற்சவம் நடைபெற்றது. இதில் திரளான, பக்தர்கள் கலந்து கொண்டனர்.

கோவையில் உள்ள மருதமலை சுப்ரமணியசாமி முருகன் கோவிலில் தைப்பூச திருவிழா நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக இன்று திருக்கல்யாண உற்சவம் விமர்சையாக நடைபெற்றது. பால், பன்னீர், ஜவ்வாது போன்ற 16 வகை வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு புதிய பட்டாடை அணிவிக்கப்பட்டு மூலவருக்கு தங்க கவசம் பொருத்தப்பட்டது. பின்னர் சிறப்பு ராஜ அலங்காரத்தில் முருக பெருமான சுப்ரமணிய சுவாமி பக்தர்களுக்கு  காட்சியளித்தார். சுப்பிரமணிய சுவாமி கிளிபச்சை பட்டு உடுத்தியும் வள்ளி சிகப்பு பட்டு உடுத்தியும் தெய்வானை மஞ்சள் பட்டு உடுத்தியும் அலங்கரிக்கப்பட்ட மணமேடையில் எழுந்தருளினர்.

பின்னர் விநாயகருக்கு  பூஜை செய்யப்பட்டு சுப்ரமணிய சுவாமிக்கு காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து யாகம் வளர்க்கப்பட்டு தாரை வார்த்தல் நிகழ்ச்சி நடந்தது. பின்னர் மங்கல வாத்தியங்கள் முழங்க  சுப்பிரமணியசுவாமி, வள்ளி தெய்வானைக்கு மங்களநாணை அணிவிக்கும் நிகழ்வு நடைபெற்றது.

அப்போது அங்கு திரண்டிருந்த பக்தர்கள்  அரோகரா என பக்தி முழக்கமிட்டனர். திருமண கோணத்தில் காட்சியளித்த முருகப்பெருமானை பக்தர்கள் வழிபட்டனர். தொடர்ந்து ஊஞ்சல் உற்சவம் மாலை மாற்றும் நிகழ்ச்சி நடந்தது. திருப்பொற் சுண்ணம் அரைத்து சாமிக்கு சாற்றப்பட்டது. தொடர்ந்து பாத காணிக்கை நடைபெற்றது பக்தர்கள் சுவாமிக்கு மொய்பணம் எழுதினர்.

தைப்பூச திருக்கல்யாண விழா ஏற்பாடுகளை மருதமலை சுப்பிரமணி சாமி கோவில் அறங்காவலர் குழு தலைவர் ஜெயக்குமார் அறங்காவலர்கள் மகேஷ் குமார் பிரேம்குமார் கனகராஜன்,சுகன்யா ராஜரத்தினம் ஆகியோர் செய்திருந்தனர், மேலும் இந்நிகழ்ச்சியில் அரசு அதிகாரிகளும் பொதுமக்களும் திரளானோர்  கலந்து கொண்டனர். இதனை தொடர்ந்து நாளை திருத்தேரோட்டம் நடைபெற உள்ளது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe