தனியார் கல்லூரி நிர்வாகம் செலுத்த வேண்டிய 3 கோடி ரூபாய்- பாதயாத்திரை செல்லும் கவுன்சிலர்...

published 1 year ago

தனியார் கல்லூரி நிர்வாகம் செலுத்த வேண்டிய 3 கோடி ரூபாய்- பாதயாத்திரை செல்லும் கவுன்சிலர்...

கோவை: கோவையில் தனியார் கல்லூரி நிர்வாகம் பேரூராட்சிக்கு  செலுத்த வேண்டிய 3 கோடி ரூபாய் சொத்துவரி  வசூலாக வேண்டும் என வேண்டி , பேரூராட்சி கவுன்சிலர் பழனி வரை  பாதயாத்திரை மேற்கொண்டு வழிபட்டார்.

கோவை மாவட்டம் திருமலையம்பாளையம் பேரூராட்சி கவுன்சிலராக  இருப்பவர் வழக்கறிஞர் ரமேஷ்குமார்.   திருமலையாம்பாளையம் பகுதியில் உள்ள நேரு கல்வி குழுமம்  பேரூராட்சி நிர்வாகத்திற்கு நீண்ட காலமாக செலுத்த வேண்டிய  3 கோடி ரூபாய் சொத்துவரியை செலுத்தாமல் 
காலம் தாழ்த்தி வருவதாக தெரிகிறது. இதனால் அந்த பேரூராட்சியில் மக்களுக்கான வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ள முடியாத நிலை இருந்து வருகிறது.  வாக்களித்த மக்களின் கேள்விக்கு  உறுப்பினர்கள் பதில் சொல்லாமல் பேரூராட்சி கவுன்சிலர்கள் இருந்து வரும் நிலையில்,  நேரு கல்விக்குழுமத்திடம் பலமுறை சொத்து வரியை செலுத்த சொல்லி பேரூராட்சி நிர்வாகம் சார்பில் வலியுறுத்திய போதும் தற்போது வரை கட்டவில்லை என கூறப்படுகின்றது.

இந்நிலையில் 
நேரு கல்வி குழுமத்தினர் 3 கோடி ரூபாய் சொத்து வரியை செலுத்த வேண்டும் என்ற வேண்டுதலுடன் , கோவை   திருமலையம்பாளையத்திலிருந்து பழனி மலை வரை 100 கிலோமீட்டர் தூரம் ரமேஷ்குமார் பாதயாத்திரை மேற்கொண்டார். கையில் வேல் மற்றும் பேனருடன் வழி நெடுகிலும், தனது பயணத்தின் நோக்கம் குறித்து பேசியபடி ரமேஷ்குமார் பாதயாத்திரை செல்கின்றார்.
இவரை வழி நெடுகிலும் உள்ள மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து செல்கின்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe