நாளை மற்றும் நாளை மறுநாள் இரவு 7 மணிவரை நியாவிலைக் கடை செயல்படும்- மாவட்ட நிர்வாகம் தெரிவிப்பு...

published 1 year ago

நாளை மற்றும் நாளை மறுநாள் இரவு 7 மணிவரை நியாவிலைக் கடை செயல்படும்- மாவட்ட நிர்வாகம் தெரிவிப்பு...

கோவை: இம்மாதம் அதிக நாட்கள் பொது விடுமுறை இருந்ததால் நாளை மற்றும் நாளை மறுநாள் இரவு 7 மணி வரை நியாய விலை கடை செயல்படும் என கோவை மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இது குறித்து மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், 10.01.2024 முதல் 14.01.2024 முடிய அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது. மேற்படி நாட்களில் இதர பொது விநியோகத்திட்ட அத்தியாவசியப் பொருட்கள் விநியோகம் செய்யப்படவில்லை. மேலும், ஜனவரி -2024 மாதத்தில் அதிகமாக அரசு விடுமுறை நாட்கள் இருந்ததாலும், இந்த மாதத்தில் பொது விநியோகத்திட்ட அத்தியாவசியப் பொருட்கள் வாங்கமால் அதிக அளவில் குடும்ப அட்டைதாரர்கள் உள்ளதாக மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற்கு அறிய வந்துள்ளது. எனவே, பொது மக்களின் நலனை கருத்தில் கொண்டு இந்த மாதத்தில் பொது விநியோகத்திட்ட அத்தியாவசியப் பொருட்கள் விநியோகம் மேற்கொள்ளாத குடும்ப அட்டைதாரர்கள் பயன்பெற ஏதுவாக 30.01.2024 மற்றும் 31.01.2024 ஆகிய இரண்டு தினங்களுக்கு காலை 8.00 மணி முதல் மாலை 7.00 வரை அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் பொது விநியோகத்திட்ட அத்தியாவசியப் பொருட்கள் விநியோகம் செய்யப்படும் என பொது தெரிவிக்கப்படுகிறது என குறிப்பிடப்பட்டுள்ளது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe