கோவையில் தர்ப்பூசணி விற்பனை விறுவிறு... என்னென்ன பலன்கள் இதில் இருக்கு?

published 11 months ago

கோவையில் தர்ப்பூசணி விற்பனை விறுவிறு... என்னென்ன பலன்கள் இதில் இருக்கு?

கோவை: கோடைக் காலம் நெருங்குவதை முன்னிட்டு கோவையில் தர்ப்பூசணி விற்பனை களைக்கட்டத் துவங்கியுள்ளது.

கோடைகாலத்தில் நம்மை குளிர வைத்து சத்துக்களைக் கொடுக்கும் முக்கியமான பழ வகைகளில் தர்ப்பூசணி பழமும் ஒன்று. வழக்கமாக இந்த பழத்தின் சீசன் மார்ச் மாதத்தில் தொடங்கி ஜூலை-ஆகஸ்ட் வரை நீடிக்கும்.

இந்த பழத்தில் வைட்டமின் சி சத்து நிறைந்துள்ளது. இது செல் அமைப்பு மற்றும் காயத்தை சரிப்படுத்துவதற்கான கொலாஜனை உற்பத்தி செய்ய உதவுகிறது. மேலும் தர்ப்பூசணி பழத்தில் வைட்டமின் ஏ, பீட்டா கரோட்டின் சத்துக்கள் உள்ளன. இவை சருமம் மற்றும் கூந்தலைப் பராமரிக்க உதவுகின்றன.

இந்த பழத்தில் நீர் மற்றும் நார்ச்சத்துக்கள் உள்ளன. இது உடலை குளிர்விக்கவும், மேலும் உள்ள பல்வேறு ஊட்டச்சத்துக்கள் இதயத்தை ஆரோக்கியமாக வைக்கவும் உதவுகின்றன. 

100 கிராம் தர்ப்பூசணி பழத்தில் 6.2 கிராம் வரை மட்டுமே சர்க்கரை சத்துக்கள் உள்ளன. இப்பழத்தைச் சாப்பிடுவதால் ஈறுகள் வலுப்பெறுகின்றன. பற்கள் பளிச்சிடுகின்றன.

இத்தகைய பல்வேறு சத்துக்கள் நிறைந்த தர்ப்பூசணி பழம் விற்பனை தற்போது கோவையில் களைகட்டியுள்ளது. கோவையின் பல்வேறு இடங்களில் சாலையோரங்களில் தர்ப்பூசணி பழக்கடைகள் அமைக்கப்பட்டுள்ளன.

வெயிலின் தாக்கத்தால் பாதிக்கப்பட்ட பலரும் தர்ப்பூசணி பழங்களை விரும்பி வாங்கி உண்கின்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe