கோவையில் நடுரோட்டில் இளைஞருக்கு பளார் விட்ட போலீஸ்காரர்!

published 2 days ago

கோவையில் நடுரோட்டில் இளைஞருக்கு பளார் விட்ட போலீஸ்காரர்!

கோவை: கோவை சின்ன வேடப்பட்டி பகுதியைச் சேர்ந்த மோகன்ராஜ். தனியார் நிறுவன ஊழியரான இவர். பணியாற்றும் நிறுவனத்திற்கு பொருள்கள் வாங்குவதற்காக நல்லாம்பாளையம் பகுதியில் உள்ள கடைக்கு சென்று விட்டு செல்போன் பார்த்துக் கொண்டு சாலையைக் கடக்க முயன்று உள்ளார்.  

அப்பொழுது அந்த சாலை வழியாக கவுண்டம்பாளையம் காவல் நிலையத்தில் காவலராக பணிபுரியும் ஜெயப்பிரகாஷ் என்பவர் இருசக்கர வாகனத்தில் வந்து உள்ளார். இதனை இதனைக் கண்ட மோகன்ராஜ் உடனடியாக சாலையின் நடுவே நின்று கொண்டார். அப்பொழுது காவலர் ஜெயபிரகாஷ் மோகன்ராஜ் கன்னத்தில் திடீரென அறைந்தா.  நொடியில் கதிகலங்கிய சாலையில் அமர்ந்த அந்த இளைஞரை பொருட்ப்படுத்தாமல் ஜெயப்பிரகாஷ் தனது வாகனத்தை ஓட்டிச் சென்றார்.

அந்த வீடியோ அங்கு பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது. அந்தக் காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் சாலையில் நடந்து சென்ற நபரை போலீஸ்காரர் கன்னத்தில் அறைந்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.  

எனவே காவல்துறை அதிகாரிகள் உரிய விசாரணை நடத்தி தாக்குதல் நடத்திய போலீஸ்காரர் மீது நவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

வீடியோ காட்சிகளை காண்பதற்கு லிங்க்கை கிளிக் செய்யவும்…

https://www.instagram.com/reel/DEwcnQhPEUc/?igsh=MXJvaTJwaXdkcHN5Mg==

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe