கோவை மாநகராட்சி அலுவலகத்தில் களைகட்டிய பொங்கல் கொண்டாட்டம்...

published 4 hours ago

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் களைகட்டிய பொங்கல் கொண்டாட்டம்...

கோவை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் அரசு அலுவலகங்களில் பொங்கல் பண்டிகையானது கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக கோவை மாநகராட்சி அலுவலகத்தில்  பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.

மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன், மேயர் ரங்கநாயகி, துணை மேயர் வெற்றிச்செல்வன் மற்றும் கவுன்சிலர்கள் பொங்கல் வைத்து வழிப்பட்டனர். தொடர்ந்து மாநகராட்சி பணியாளர்களுக்கு  கோலப்போட்டி நடைபெற்றது. அக்கோலங்களை ஆணையாளர் பார்வையிட்டு பாராட்டினார்.

தொடர்ந்து அங்கு பல்வேறு மாநகராட்சி பள்ளி குழந்தைகள் மாணவர்களின் கலை நிகழச்சிகள் நடைபெற்றன. இதனை மாநகராட்சி ஆணையாளர் துவக்கி வைத்து பார்வையிட்டார். 


கலை நிகழ்ச்சிகளில் பரதம், கரகம், ஒயிலாட்டம், பறை, என பாரம்பரிய நடனங்களையும் மேற்கத்திய நடனங்களையும் பல்வேறு மாநகராட்சி பள்ளி குழந்தைகள் நடனக்குழுக்களை சேர்ந்தவர்கள் ஆடி அசத்தினர். மேலும் வள்ளிக்கும்மி நடனமும் இடம்பெற்றிருந்தது.

அதுமட்டுமின்றி 90's கிட்ஸ் மிட்டாய் கடை பலரையும் கவர்ந்தது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe