சாலையில் இளைஞருக்கு பளார் விட்ட கோவை போலீஸ்காரர் தூக்கியடிப்பு!

published 1 day ago

சாலையில் இளைஞருக்கு பளார் விட்ட கோவை போலீஸ்காரர் தூக்கியடிப்பு!

கோவை: கோவையில் சாலை வைத்து இளைஞரை கன்னத்தில் அறைந்த போலீஸ்காரரை இடமாற்றம் செய்து காவல் ஆணையர் உத்தரவு.

கவுண்டம்பாளையம் காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி வந்தவர் ஜெயபிரகாஷ். இவர் நல்லாம்பாளையம் அருகே வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது, அவ்வழியாக ஒரு இளைஞர் சாலையைக் கடக்க முயன்றார். அவரது கையில் செல்போன் வைத்திருந்தார்.

அப்போது, இளைஞர் முன்பு வாகனத்தை நிறுத்திய ஜெயபிரகாஷ், இளைஞரின் கன்னத்தில் ஓங்கி அறைந்தார். இதில் அந்த இளைஞர் நிலைகுலைந்தார்.

ஆனால், அதனைப் பொருட்படுத்தாமலும், ஹெல்மெட் அணியாமலும் மீண்டும் தனது வாகனத்தை ஓட்டிச் சென்றார்.

இந்த சம்பவம் அங்கிருந்த சிசிடிவி காமிராவில் பதிவானது. அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இதனைப் பார்த்து பொதுமக்கள் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், கோவை மாநகர காவல் ஆணையர் சரவண சுந்தர், காவலர் ஜெயபிரகாசை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு பணியிடமாற்றம் செய்து உத்தரவிட்டார்.

காவலர் இளைஞரை தாக்கும் வீடியோ https://www.instagram.com/p/DExTktUP_E4/

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe