கோவையில் ஸ்மார்ட் வாட்ச்-ஐ ஸ்மார்ட்டாக திருடிய தம்பதி..! சிசிடிவி காட்சிகள் உள்ளே..!

published 1 year ago

கோவையில் ஸ்மார்ட் வாட்ச்-ஐ ஸ்மார்ட்டாக திருடிய தம்பதி..! சிசிடிவி காட்சிகள் உள்ளே..!

கோவை: கோவை சிங்காநல்லூர் பகுதியில் கை கடிகாரம் திருடிய தம்பதிகளின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.

கோவை சிங்காநல்லூர் பேருந்து நிலையம் எதிர் புரம்  ஹை பயானிக்கல்  என்ற கடை இயங்கி வருகிறது. இங்கு செல்போன் மற்றும் கை கடிகாரம்  விற்பனை மற்றும் பழுது நீக்கப்படுகிறது. இந்நிலையில் 27ம் தேதி அந்த கடைக்கு ஒரு தம்பதியினர் வந்துள்ளனர். அந்த நபர் அவரது செல்போனுக்கு டெம்பர் கிளாஸ் ஒட்ட வேண்டுமென கேட்டுள்ளார். அவரது மனைவி கடையில் இருந்த இருக்கையில் அமர்ந்து கொண்டு இருந்துள்ளார். டெம்பர் கிளாஸை கடைக்காரர் ஒட்டி கொண்டிருந்த வேளையில் அந்த பெண்மணி அருகில் உள்ள கை கடிகார பாக்ஸ் எடுத்து அவர் தனது பையில் போட்டு கொண்டுள்ளார்.

இதன் சிசிடிவி காட்சிகள்  தற்போது வெளியாகி உள்ளது. அந்த கை கடிகாரத்தின் மதிப்பு 2500 ரூபாய் இருக்கும் என கூறப்படுகிறது. மேலும் இச்சம்பவம் குறித்து எந்த புகார் அளிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

திருட்டு சம்பவத்தின் சிசிடிவி காட்சிகளை காண்பதற்கு லிங்க்கை கிளிக் செய்யவும்…

https://youtu.be/tkF9udXIsko?si=DrMni-ssqDOOfomD

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe