கோவையில் நண்பனின் பிறந்தநாள் பார்ட்டியில் பங்கேற்ற கல்லூரி மாணவர் திடீர் சாவு…

published 1 year ago

கோவையில் நண்பனின் பிறந்தநாள் பார்ட்டியில் பங்கேற்ற கல்லூரி மாணவர் திடீர் சாவு…

கோவை: உடுமலைப்பேட்டை பள்ளப்பாளையம்  பகுதியை சேர்ந்தவர் பேச்சிமுத்து. இவரது மகன் கௌசிக்ராம்(21). இவர் கோவை குனியமுத்தூர் சந்தியா நகர் பகுதியில் தங்கி அங்குள்ள  தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி. 3ம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில், கடந்த 10 நாட்களுக்கு முன்பு பழனி பாதயாத்திரை செல்வதற்காக அவரது வீட்டிற்கு சென்றுள்ளார். பின் பாதயாத்திரையை முடித்து விட்டு கோவை திரும்பினார். 

நேற்று முன்தினம் இரவு அவரது நண்பரின் பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்டார். பின்னர் நள்ளிரவு  2 மணியளவில் எழுந்த அவர் உடல் சோர்வாக இருந்ததால் வாந்தி மயக்கம் ஏற்பட்டது.  பின்பு குளித்து விட்டு மீண்டும் உறங்க சென்றார். காலை 9 மணி ஆகியும் எழும்ப வில்லை. அவரது நண்பர்கள் நீண்ட நேரம் எழுப்பியும் பேச்சு மூச்சின்றி கிடந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த நண்பர்கள் அவரை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். இந்த சம்பவம் தொடர்பாக குனியமுத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

நண்பரின் பிறந்தநாள் விழாவில் பங்கேற்ற கல்லூரி மாணவர் திடீரென உயிரிழந்த சம்பவம் அவரது நண்பர்கள் மற்றும் உறவினர்கள் இடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe