கோவையில் ரசிகர்களுடன் கலந்துரையாடி இன்ப அதிர்ச்சி கொடுத்த ப்ளூ ஸ்டார் படக்குழுவினர்...

published 1 year ago

கோவையில் ரசிகர்களுடன் கலந்துரையாடி இன்ப அதிர்ச்சி கொடுத்த ப்ளூ ஸ்டார் படக்குழுவினர்...

கோவை: ப்ளூ ஸ்டார் திரைப்படம் இரண்டாவது வாரமாக திரையரங்குகளில் ஓடி கொண்டிருக்கிறது. இந்நிலையில் நேற்று மாலை கோவை சரவணம்பட்டி பகுதியில் உள்ள ஐநாக்ஸ் திரையரங்கில் “ப்ளூ ஸ்டார்” திரைப்பட குழுவினர்களான நடிகர்கள் அசோக் செல்வன், சாந்தனு, ப்ரித்வி பாண்டியராஜன் நடிகை கீர்த்திபாண்டியன் உள்ளிட்டோர் வருகை புரிந்து படம் பார்க்க வந்த ரசிகர்களுடன் கலந்துரையாடினர். 

பின்னர் ரசிகர்களுடன் இணைந்து செல்பி புகைப்படம் எடுத்து கொண்டனர். படக்குழுவை பார்த்த ரசிகர்கள் உற்சாகமடைந்தனர். 

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் அசோக் செல்வன், இரண்டாவது வாரமாக ப்ளூ ஸ்டார் படத்தை பார்க்க மக்கள் ஆர்வம் காட்டி வருவது மகிழ்ச்சி அளிப்பதாகவும் 200 திரையரங்குகளுக்கும் மேல் இந்த படம் வெற்றிகரமாக ஓடி மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது என்றார். அதே போல் மல்டிபிளக்ஸ் திரையரங்குகள் மட்டுமல்லாமல் மற்ற திரையரங்குகளிலும் ப்ளூ ஸ்டார் படம் ஓடுவது எங்கள் அனைவருக்கும் பெருமையாக உள்ளதாகவும் தெரிவித்தார். குறிப்பாக எனது படம் வெளியாகும் போது நிச்சயமாக கோவையில் உள்ள திரையரங்கில் வந்து படம் பார்ப்பேன் எனவும் பெருமிதம் கொண்டார்.  ப்ளூ ஸ்டார் படத்திற்கும் கோவை மக்கள் நல்ல வரவேற்பு கொடுத்துள்ளனர் என்றார். ப்ளூ ஸ்டார் திரையரங்கிற்காக உருவாக்கப்பட்ட படம் என கூறிய அவர் கொரோனாவிற்கு பிறகு திரையரங்கிற்கு வரும் மக்களின் கூட்டம் குறைந்துள்ளதாக நினைத்த நிலையில், தற்போது மீண்டும் மக்கள் திரையரங்கிற்கு வருவது மகிழ்ச்சி அளிக்கிறது என தெரிவித்தார். இந்த படம் மக்களிடையே நல்ல வரவேற்பு கொடுத்ததோடு மட்டுமல்லாமல், எனது மற்ற படங்களில் இல்லாத புதிய ரசிகர்களை பெற்றுள்ளேன் எனவும் மக்களோடு இணைந்துள்ளேன் எனவும் கூறினார்.

பின்னர் பேசிய நடிகர் சாந்தனு ப்ளூ ஸ்டார் படத்திற்கு கோவை மக்கள் பெரிய வரவேற்பு கொடுத்துள்ளது  மகிழ்ச்சி அளிக்கிறது என்றார். இந்த படம் அனைவருக்கும் அனைத்தும் சமம் என்பதை வலியுறுத்தும் எனவும்  இந்த படம் இயக்குனர் பா.ரஞ்சித் கூறியது போல நல்ல விஷயங்களுக்கு தடைகள் வரத்தான் செய்யும் அதனைத் தாண்டி நாம் செய்ய வேண்டும் என கூறிய அவர் அனைத்தும் அனைவருக்கும் சமம் என்பதை தலையில் தட்டி சொல்லக்கூடிய விஷயங்கள் உள்ளது என்றார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe