தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் சார்பில் இந்த ஆண்டிற்கான புதிய பயிர் ரகங்கள் வெளியீடு...

published 1 year ago

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் சார்பில் இந்த ஆண்டிற்கான புதிய பயிர் ரகங்கள் வெளியீடு...

கோவை: கோவையில் இயங்கி வரும் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் ஆண்டு தோறும் விவசாயிகளின் பயன்பாட்டிற்காக புதிய பயிர் ரகங்கள் வெளியிடப்படும். அந்த வகையில் இந்த 2024ம் ஆண்டுக்கான 20 புதிய பயிர் ரகங்கள் வெளியிடப்பட்டது. இதனை பல்கலைக்கழக துணைவேந்தர் கீதாலட்சுமி இன்று வெளியிட்டார்.

வேளாண் பயிர்கள் மற்றும் தோட்டக்கலை பயிர்கள் என 20 புதிய ரகங்கள் தமிழ்நாடு அரசின் மாநில பயிர் ரகங்கள் வெளியீட்டு குழுவால் அங்கீகரிக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் செய்தியாளர்களை சந்தித்த அவர், வேளாண் பயிர்களில் நெல்லில் இருவழி வீரிய ஒட்டு ரகம் மற்றும் பாசுமதி அல்லாத வாசனை கொண்ட நீள் சன்ன ரகம் என இரண்டு ரகங்களும், தானிய பயிர்களில் இனிப்புச் சோளம் உட்பட நான்கு புதிய ரகங்களும், எண்ணெய் வித்துக்கள், பருத்தி மற்றும் பசுந்தாள் உரப்பயிர் போன்ற பயிர்களில் தலா ஒரு ரகமும் வெளியிடப்பட்டுள்ளது என்றார்.

மேலும், தோட்டக்கலை பயிர்கள் சாகுபடி செய்யும் விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு பன்னீர் திராட்சை, பலா, வாழை என மூன்று பழப்பயிர்களும், கத்திரி, கொத்தவரை, வெள்ளைத்தண்டுக்கீரை, சிவப்புக்கீரை மற்றும் முருங்கை என ஐந்து காய்கறி பயிர்களும் வெளியிடப்பட்டுள்ளது என தெரிவித்தார். அதுமட்டுமின்றி சிவப்புப் புளி மற்றும் தென்னையில் தலா ஒரு ரகமும் வெளியிடப்பட்டுள்ளதாகவும் விவசாய பெருமக்கள் இந்த புதிய பயிர் ரகங்களை சாகுபடி செய்து பயன்பெறுமாறு வேளாண்மை பல்கலைக்கழகம் சார்பில் கேட்டுக் கொள்ளப்படுகிறது என தெரிவித்தார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe