பக்கத்து வீட்டு சண்டை.. கோவை ஆட்சியரை பார்க்க கத்தியுடன் வந்த பெண்..!

published 1 year ago

பக்கத்து வீட்டு சண்டை.. கோவை ஆட்சியரை பார்க்க கத்தியுடன் வந்த பெண்..!

கோவை: மாதம்பட்டி பகுதி குப்பனூர் பகுதியை சேர்ந்த மரகதவல்லி(எ) மாலா.தனது சொந்த வீட்டில் கடந்த 20 ஆண்டுகளாக வசித்து வரும் நிலையில் இவரது வீட்டின் அருகில் வசிக்கும் சக்தி,தேவா,மாரியம்மாள்,
சுதா ஆகிய நால்வரும் தொடர்ந்து மரகதவள்ளியை தகாத வார்த்தைகளால் பேசி தன்னை கொச்சைப்படுத்தி வந்ததாகவும் இதுகுறித்து கேட்டபோது தன்னை தாக்கியதாக கூறி கடந்த 19.03.22ம் ஆண்டு பேரூர் காவல் நிலையத்தில் புகார் அளித்து இருந்தார்.

இதுகுறித்து புகார் அளித்த நிலையில்
இதுவரை வழக்கு செய்யப்படவில்லை என கூறி மேல் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் எனவும் தனது புகாருக்கு காவல் கண்காணிப்பாளர்  தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் உரிய பதில் அளிக்க வலியுறுத்தி மனு அளிக்க வந்தவர் சாலையில் அமர்ந்து தான் வைத்திருந்த கத்தியை கழுத்தில் வைத்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்.இதனை கண்ட  பணியில் இருந்த  காவல்துறையினர் மரகதவள்ளியை  சமாதானப்படுத்த முயன்றனர்.அவர்   சமாதானம் ஆகாத காரணமாக அவர்  வைத்திருந்த கத்தியை பறித்த காவலர்கள் அவரை பந்தய சாலையில் உள்ள காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். தொடர்ந்து காவல் நிலையத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe