கோவை வந்த லவ்வர் திரைப்பட குழுவினர்- டெல்லி கணேஷ் போல் மிமிக்கிரி செய்து நடிகர் மணிகண்டன் அசத்தல்...

published 1 year ago

கோவை வந்த லவ்வர் திரைப்பட குழுவினர்- டெல்லி கணேஷ் போல் மிமிக்கிரி செய்து நடிகர் மணிகண்டன் அசத்தல்...

கோவை: வரும் பிப்ரவரி 9ஆம் தேதி திரைக்கு வர உள்ள லவ்வர் திரைப்படத்தின் தயாரிப்பாளர் யுவராஜ் கணேசன், நடிகர் மணிகண்டன்,நடிகை கௌரி பிரியா, துணை நடிகர் கண்ணன் ரவி ஆகியோர் கோவையில் செய்தியாளர்களை சந்தித்தனர். 

முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் மணிகண்டன், கல்லூரி காலம் முடிந்த பிறகு இளைஞன் சந்திக்கக்கூடிய பிரச்சனைகள் குறித்த கதை அம்சத்துடன் காதலை மையமாக கொண்டு இந்த படம் தயாராகி இருப்பதாகவும் திரைப்படம் என்ற ஒரு எண்ணம் மக்களுக்கு வராத மிக தத்ரூபமாக வாழ்க்கையை எடுத்து கூறும் விதத்தில் படம் உருவாகி உள்ளதாகவும் அப்போது அவர் தெரிவித்தார்.

இந்த படத்தின் கதாநாயகியாக அறிமுகம் ஆகியுள்ள கௌரி மற்றும் தான் உட்பட அனைவரும் கதாபாத்திரத்துடன் ஒன்றி நடித்துள்ளதாகவும் வருகிற ஒன்பதாம் தேதி படம் திரைக்கு வர உள்ளதாகவும் கூறினார்.மேலும் ஜெய்பீம் படத்திற்கு தனக்கு தேசிய விருது கிடைக்காததை எண்ணி வருத்தப்படவில்லை எனவும் ஒவ்வொரு கதாபாத்திரத்தை ஏற்று நடிக்கும் போதும் மிக விரும்பியே தான் நடிப்பதாகவும் சுட்டி காட்டினார். நடிகர் விஜய் அரசியல் கட்சி துவங்கியதற்கு வாழ்த்து தெரிவிப்பதாகவும் நடிகர்கள் அரசியலுக்கு வருவதை வரவேற்பதாகவும் கூறிய அவர், தனக்கு அரசியலுக்கு வரும் எண்ணம் இல்லை என்றும் கூறினார். தொடர்ந்து நடிகர் டெல்லி கணேஷ் குரலில் மிமிக்கிரி செய்த மணிகண்டன் லவ்வர்ஸ் திரைப்படம் வெற்றி பெற வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

வீடியோவை காண்பதற்கு லிங்க்கை கிளிக் செய்யவும்…

https://youtube.com/shorts/tfLUxMoRsjY?si=DdwF1HcHM20oABug

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe