பத்து நாட்களே ஆன கைக்குழந்தையுடன் கோவையில் காவலர் உடற்தகுதி தேர்வுக்கு வந்த பெண்...

published 1 year ago

பத்து நாட்களே ஆன கைக்குழந்தையுடன் கோவையில் காவலர் உடற்தகுதி தேர்வுக்கு வந்த பெண்...

கோவை: குழந்தை பிறந்து பத்து நாட்களேஆன நிலையில் தனது கைக்குழந்தையுடன் உடல்தகுதி தேர்விற்கு வந்த இளம் பெண் அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் சார்பில், இரண்டாம் நிலைக் காவலர் பணிக்கு தேர்வானவர்களுக்கு உடல் தகுதித் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்புப் பணி இன்று கோவை காவலர் பயிற்சி பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

இந்த தேர்வில் கலந்து கொள்ள பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஆண், பெண் இருபாலரும் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இந்த நிலையில் குழந்தை பிறந்து பத்து நாட்களேஆன நிலையில் தனது கைக்குழந்தையுடன் கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த பெண் கோவையில் நடைபெறுகின்ற இரண்டாம் நிலைக் காவலர் பணிக்கு உடல் தகுதி தேர்வுக்கு ஆவலுடன் கலந்துகொண்டார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe