கோவா சென்று கொடி நாட்டிய தமிழக மங்கைகள்!

published 1 year ago

கோவா சென்று கொடி நாட்டிய தமிழக மங்கைகள்!

கோவை: கோவாவில் நடைபெற்ற 6வது தேசிய விளையாட்டுப் போட்டிகளில் தமிழகத்தை சேர்ந்த பெண்கள் கூடைப்பந்து போட்டியில் அனைத்து பிரிவுகளிலும் பதக்கங்கள் பெற்று அசத்தியுள்ளனர்.

கோவா மாநிலத்தில் 6வது  நேசனல் மாஸ்டர்ஸ் கேம்ஸ் போட்டிகள் கடந்த 8ம் தேதி தொடங்கி 13ம் தேதி வரை நடைபெற்றது. இதில் தடகளம், கூடைப்பந்து, செஸ், கால்பந்து, ஹாக்கி உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன.

இதில் கூடைப்பந்து விளையாட்டில் பெண்களுக்கு 5 பிரிவுகளின் கீழ் போட்டிகள் நடைபெற்றன. 35 வயதுக்கு மேற்பட்டோருக்கான கூடைப்பந்து போட்டியில் தமிழக கூடைப்பந்து அணி தங்கம் வென்றது. 

30, 40, 45 மற்றும் 50 வயதிற்கு மேற்பட்டோருக்கான பிரிவுகளில் தமிழக மகளிர் அணி வெள்ளி பதக்கம் வென்றுள்ளது. கூடைப்பந்து போட்டியில் கோவையில் இருந்து ஜாய்சி (உடற்கல்வி இயக்குநர், ரத்தினம் கல்லூரி), ஜெயசித்ரா (உடற்கல்வி இயக்குநர், கிருஷ்ணம்மாள் கல்லூரி), பிரபா, பிரீத்தி, வித்யா, தீபிகா ஆகியோர் சென்று போட்டிகளில் விளையாடி பதக்கங்களை வென்று தமிழகத்திற்கு பெருமை சேர்த்துள்ளனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe