பொதுமக்கள் கண் முன்னே கோவை பேருந்து நிறுத்தத்தில் மாணவர் வெட்டிக்கொலை- காதல் தகராறில் பயங்கரம்…

published 1 year ago

பொதுமக்கள் கண் முன்னே கோவை பேருந்து நிறுத்தத்தில் மாணவர் வெட்டிக்கொலை-  காதல் தகராறில் பயங்கரம்…

கோவை: கோவை ஒண்டிப்புதூர் பேருந்து நிறுத்தத்தில் பொதுமக்கள் கண் முன்பே மாணவர் அரிவாளால் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சிங்காநல்லூர் பகுதியை சேர்ந்தவர் பிரணவ் (17). பிளஸ் டூ பள்ளி மாணவர். இவர் இன்று காலை ஒண்டிப்புதூர் பேருந்து நிறுத்தத்தில் பஸ்சுக்காக காத்திருந்தார். அவர் மற்றொரு மாணவியுடன் நின்றிருந்ததாக தெரிகிறது. 

அப்போது அங்கு வந்த 17 வயதுடைய சிறுவன் ப்ரணவிடம் தகராறில் ஈடுபட்டார். திடீரென தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் பிரணவ்வை சரமாரியாக வெட்டினார். அவரிடமிருந்து தப்பிக்க உயிர் பயத்தில் அவர் அங்கிருந்து ஓடினார். இருப்பினும் துரத்தி, துரத்தி வெட்டியதில் தலை, கழுத்து, வயிறு உள்ளிட்ட இடங்களில் காயம் ஏற்பட்டு ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பலியானார். இதனைப்பார்த்த அங்கு பஸ்சுக்கு காத்திருந்த பொதுமக்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். தகவல் அறிந்து வந்த போலீசார் சடலத்தை மீட்டு சிங்காநல்லூர் இஎஸ்ஐ மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். 

பின்னர் ப்ரணவை வெட்டி கொலை செய்த சிறுவன் சூலூர் காவல் நிலையத்தில் சரணடைந்தான். சூலூர் போலீசார் சிறுவனை சிங்காநல்லூர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் அவனிடம் விசாரணை நடத்தினர். முதல் கட்ட விசாரணையில், ஒரு மாணவியை காதலிப்பதில் இருவருக்கும் இடையே ஏற்பட்ட மோதல் இந்த கொலையில் முடிந்ததாக தெரிகிறது.
பட்டப்பகலில் பொதுமக்கள் கண் முன்னே மாணவர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe