கோவையில் போலி நகையை அடகு வைத்து 37 லட்சம் ரூபாய் மோசடி…

published 1 year ago

கோவையில் போலி நகையை அடகு வைத்து 37 லட்சம் ரூபாய் மோசடி…

கோவை: கோவை காளப்பட்டி அருகேயுள்ள வெள்ளானைப்பட்டி பகுதியை சேர்ந்தவர் ஜெபசீலன் சாம்ராஜ் (36). இவர் வரதாஜபுரம் பகுதியில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் உதவி மண்டல மேலாளராக பணியாற்றி வருகிறார். 

இவர் பீளமேடு போலீசில் அளித்த புகாரில் , ‘எங்களது நிதி நிறுவனத்தில் கடந்த 2022ம் ஆண்டு அக்டோபர் மாதம் 6ம் தேதி முதல் நகைகள் அடகு வைத்து பணம் பெற்றது தொடர்பாக ஆய்வு நடத்தப்பட்டது. இதில் போலியான நகைகள் வைத்து 37 லட்ச ரூபாய் பெறப்பட்டிருப்பது தெரியவந்தது. தங்க முலாம் பூசிய நகைகள், கவரிங் நகைகள், ஒரிஜினல் போல் உள்ள போலி நகைகளை வைத்து சிலர் பணம் பெற்றுள்ளனர். 12 வாடிக்கையாளர்களின் பெயரில் போலி நகைகள் வைத்து முறைகேடாக பணம் பெறப்பட்டுள்ளது. 

இதற்கு எங்கள் நிதி நிறுவனத்தில் சில மாதம் முன் பணியாற்றிய முன்னாள் கிளை மேலாளர் சுனிதா ஹரிதாஸ், முன்னாள் சீனியர் எக்ஸ்கியூட்டிவ் பால் ஜெய்சன், கிளை செயல் அலுவலர் கவுசல்யா, அய்னா சேஜி ஆகியோர் மோசடிக்கு முக்கிய காரணமாக இருந்துள்ளதாக தெரிகிறது. இவர்கள் மீதும், 12 வாடிக்கையாளர்கள் மீதும் நடவடிக்கை எடுத்து 37 லட்ச ரூபாய் மீட்டு தர வேண்டும், ’’ என தெரிவித்துள்ளார். இந்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் நடேசன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். 

போலியான தங்க நகைகள் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தங்க நகைகளை போல் போலி நகைகள் வைத்து நடத்தப்பட்ட இந்த மோசடி குறித்தும் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe