தேசிய அளவில் விருதுகளை வென்று குவித்த கோவையை சேர்ந்த கார் டிசைனிங் கம்பெனி…

published 1 year ago

தேசிய அளவில் விருதுகளை வென்று குவித்த கோவையை சேர்ந்த கார் டிசைனிங் கம்பெனி…

கோவை: கோவையை நேரு விளையாட்டு அரங்கம் அருகே ஆர்.எம்.கார்ஸ் என்ற கார் டிசைனிங் கம்பெனி இயங்கி வருகிறது. இவர்கள் வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப கார்களின் வண்ண விளக்குகள், ஸ்பீக்கர்களை வடிவமைத்து தருகின்றனர். இந்நிலையில் தேசிய அளவில் நடைபெற்ற கார் டிசைனிங் போட்டியில் பங்கேற்று 9 விருதுகளை வென்றுள்ளனர்.

பிப்ரவரி மாதம் 10,11ம் தேதிகளில் சென்னையில் EMMA என்ற நிறுவனம் கார் டிசைனிங் போட்டி நடத்தியது. இந்தியாவில் முதல்முறையாக நடைபெறும் இந்த போட்டியில் இந்தியா முழுவதிலும் இருந்து பல்வேறு மாநிலங்களை சேர்ந்த கார் டிசைனிங் கம்பெனிகள்  கலந்து கொண்டனர். இந்த போட்டி, Entry, Expert, Skilled, Master ஆகிய நான்கு பிரிவுகளின் கீழ் நடத்தப்பட்டது.

இந்த போட்டியில் ஆர்.எம்.கார்ஸ் கம்பெனியினர் 21 கார்களுடன் போட்டியில் பங்கேற்ற நிலையில் 9 கார்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டுள்ளது. இதனை ஆர்.எம்.கார்ஸ் கம்பெனியினர் மகிழ்ச்சியுடன் கொண்டாடினர்.

இது குறித்து பேசிய ஆர்.எம்.கார்ஸ் கம்பெனியின், நிர்வாக இயக்குனர் நயீம் இந்த போட்டி நடக்கவுள்ளது என தெரிய வந்த போது தங்களிடம் வெறும் 6 கார்கள் மட்டுமே இருந்ததாகவும் பின்னர் எங்களுடைய வாடிக்கையாளர்கள் அவர்களது கார்களை கொடுத்ததால் 21 கார்களுடன் இந்த போட்டியில் பங்கேற்று 9 விருதுகளை  வென்றதாக நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார். இதற்காக எங்கள் கம்பெனியில் பணிபுரிவோர் சுமார் 2 வாரத்திற்கும் மேல் பணியாற்றி போட்டிக்காக கார்களை வடிவமைத்தாக கூறினார். மேலும் வாடிக்கையாளர்களின் ஆதரவுடன் தங்கள் முயற்சியுடனும் தொடர்ந்து பல்வேறு போட்டிகளில் பங்கேற்போம் எனவும் கூறினார்.

இவர்கள் இதற்கு முன்பு குடியரசு தினத்தை முன்னிட்டு இவர்களது கார் ஒன்றில் தேசிய கொடி வண்ணங்களில் விளக்குகளை பொருத்தி பெண் சுதந்திர போராட்ட வீராங்கனைகள் உட்பட பல்வேறு சுதந்திர போராட்ட வீரார்கள் தியாகிகள், கோவையை சேர்ந்த சுதந்திரப் போராட்ட வீரர்கள் மற்றும் தியாகிகளின் வீடியோக்களை ஒளிபரப்பி பலரது வரவேற்பையும் பெற்றது குறிப்பிடத்தக்கது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe