பெண்களை வாக்கு வங்கியாக பிரதமர் பார்ப்பதில்லை- வானதி சீனிவாசன் கோவையில் பேச்சு...

published 11 months ago

பெண்களை வாக்கு வங்கியாக பிரதமர் பார்ப்பதில்லை- வானதி சீனிவாசன் கோவையில் பேச்சு...

கோவை: தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில் நடைபெற்று வரும் 'என் மண் என் மக்கள்' யாத்திரை கோவை மாவட்டம் சிங்காநல்லூர் தொகுதிக்குட்பட்ட பாப்பநாயக்கன்பாளையம் பகுதியில் நேற்று மாலை நடைபெற்றது.

 

பழையூர் பகுதியில் துவங்கிய யாத்திரை சித்தாபுதூர் அருகில் நிறைவு பெற்றது. இதில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையுடன், மத்திய இணை அமைச்சர்கள் எல்.முருகன், ராஜீவ் சந்திரசேகர், பாஜக தேசிய மகளிர் அணி தலைவரும் கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் மற்றும் பாஜக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

யாத்திரையின் நிறைவாக சித்தாபுதூர் அருகே பொதுக்கூட்ட நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் கலந்துகொண்டு பேசிய வானதி சீனிவாசன்,

'பெண்கள் முன்னேற்றத்திற்காக மத்திய பாஜக அரசு தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. பெண் குழந்தைகளை போற்றுவோம் திட்டம், சுகன்யா சம்ரிதி திட்டம் என பல்வேறு திட்டங்களில் தமிழகம் பெரும் பயன் அடைந்துள்ளது. இவற்றோடு பெண்களின் பொருளாதார நிலையை முன்னேற்றும் விதமாக நாட்டின் மூன்று கோடி பெண்களை லட்சாதிபதிகளாக ஆக்குவேன் என பிரதமர் உறுதி அளித்து, இப்போது 2 கோடி பெண்களை லட்சாதிபதியாக உருவாக்கியுள்ளார். 

பெண்களை வாக்கு வங்கியாக பிரதமர் எப்போதும் பார்ப்பதில்லை. கட்சியின் வேட்பாளர் பட்டியல் தயாராகும்போது எத்தனை பெண்கள் அதில் இருக்கிறார்கள் என கேட்பார். பெண்கள் அரசியலில் ஈடுபடுவதை ஊக்குவிக்கும் விதமாக 33 சதவீத இட ஒதுக்கீடு வழங்கியுள்ளார்' என கூறினார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe