உலகம் இன்று: சூரியனில் வெப்ப சிதறல்... சீனாவில் கோர விபத்து... போலீசில் குற்றவாளி... இன்னும் சில...!

published 11 months ago

உலகம் இன்று: சூரியனில் வெப்ப சிதறல்... சீனாவில் கோர விபத்து... போலீசில் குற்றவாளி... இன்னும் சில...!

உலகின் பல்வேறு பகுதிகளில் நடந்த ஸ்வாரஸ்யமான செய்திகளை இந்த தொகுப்பில் காணலாம்.

வெப்ப சிதறல்

சூரியனின் இடது பக்கத்தில் ஏற்பட்ட வெப்ப சிதறலை நாசா அனுப்பிய சோலார் டைனமிக்ஸ் விண்கலம் புகைப்படம் எடுத்துள்ளது. இது போன்ற சூரிய சிதறல்கள் தொலைத்தொடர்பு, மின் தேவைகளை பாதிக்கக்கூடும் என்பது குறிப்பிடத்தக்கது. 

கார்கள் விபத்து

சீனாவின் பெரும்பாலான பகுதிகளில் பனிப்புயல் மற்றும் பனி மழையால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அங்குள்ள சுஜோவு நகரில் உள்ள எக்ஸ்பிரஸ் சாலையில் 100க்கும் மேற்பட்ட கார்கள் ஒன்றுடன் ஒன்று மோதி கடும் சேதமடைந்துள்ளன.

வெப்பம்-பனிப்பொழிவு

மத்திய ஐரோப்பிய நாடுகளில் பருவம் தவறிய வானிலை மாற்றத்தால் பனிப்பொழிவைச் சுற்றுலாப்பயணிகள் கண்டு ரசித்தனர். மலைச்சிகரங்களில் ஒரு புறம் வெப்பம் காணப்படும் நிலையில், மறுபுறம் பனிப்பொழிவு காணப்படுகிறது. இதனை மக்கள் ரசித்து வருகின்றனர்.

எரிமலை கொந்தளிப்பு 

கவுதமாலாவில் உள்ள அவுஹா எரிமலை தொடர்ந்து கொந்தளிப்பில் உள்ளதால் அருகில் உள்ளவர்கள் தொடர்ந்து அச்சத்துள் உள்ளனர். எரிமலை கொந்தளிப்பைக் கட்டுப்படுத்த

ஹெலிகாப்டர் மூலம் தண்ணீரை ஊற்றும் பணியில் அந்நாட்டு ராணுவம் ஈடுபட்டுள்ளது.

கிரிக்கெட் 

நான்காவது டெஸ்ட் போட்டியில் முதல் நாள் ஆட்ட நேரம் முடிவில் இங்கிலாந்து ஏழு விக்கெட்டுகள் இழந்து பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வீரர் சதமடித்தார்.

ராஜினாமா 

இந்திய மகளி ஹாக்கி அணி பயிற்சியாளர் ஸ்கோப்மேன் பதவியை ராஜினாமா செய்துள்ளார். உலக கோப்பை போட்டிக்கு இந்திய அணி தகுதி பெறாத நிலையில் அவர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

போலீஸ் குற்றவாளி

சென்னையில் தொடர் குற்றச்செயலில் ஈடுபட்ட காவலர் பணி நீக்கம்.செம்பியம் காவல் நிலையத்தில் குற்றப்பிரிவில் தலைமைக் காவலராக பணியாற்றி வந்த செந்தில்குமார் முன்னதாக வேளச்சேரி காவல் நிலையத்தில் பணியாற்றி வந்தார்.


 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe