அன்னூரில் சாமி கும்பிடச்சென்ற பெண்ணிடம் கைவரிசை.... சி.சி.டி.வி., காட்சிகள் உள்ளே!

published 11 months ago

அன்னூரில் சாமி கும்பிடச்சென்ற பெண்ணிடம் கைவரிசை.... சி.சி.டி.வி., காட்சிகள் உள்ளே!

கோவை:  கோவை மாவட்டம் அன்னூரில் சுமார் 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த அருள்மிகு மன்னீஸ்வரர் சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் பிரதோஷம் உள்ளிட்ட விசேஷ தினங்கள் மட்டுமல்லாது அனைத்து தினங்களிலும் கோவை, திருப்பூர்,ஈரோடு,நீலகிரி உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து தரிசனம் செய்து செல்வர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் அதாவது பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதி காலை 11 மணியளவில் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் இருந்து பெண் ஒருவர் சாமி கும்பிட வந்துள்ளார்.அப்போது, அங்கு வந்த மர்ம நபர் சாமி கும்பிடுவது போல் நடித்து அந்தப்பெண் மெய்மறந்து சாமி தரிசனம் செய்திருந்த வேளையில் அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அவரது செல்போனை லாபகமாக திருடி சென்றார்.

இந்த காட்சிகள் கோவில் வளாகத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

இதுகுறித்து அப்பெண் அன்னூர் காவல் நிலையத்தில் பிப்ரவரி 26 ஆம் தேதி இரவு 10 மணியளவில் புகார் அளித்துள்ளார்.புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த அன்னூர் காவல் ஆய்வாளர் நித்யா தலைமையிலான போலீசார் கோவில் வளாகத்தில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த சிசிடிவி காட்சிகள் இன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

 

சிசிடிவி காட்சிகளை காண்பதற்கு லிங்க்கை கிளிக் செய்யவும்…

https://youtu.be/9hEvCHfYVKM

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe