இளைஞர்கள் வென்றால் தான் தமிழ்நாடு வெற்றி பெறும்- கோவையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உரை...

published 11 months ago

இளைஞர்கள் வென்றால் தான் தமிழ்நாடு வெற்றி பெறும்- கோவையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உரை...

கோவை: கோவை கொடிசியாவில்  "நான் முதல்வன்" திட்டத்தின் கீழ் பணி நியமன ஆணைகள் வழங்கும் விழா மற்றும் கல்லூரி கனவு 2024 துவக்கவிழா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, முத்துச்சாமி ஆகியோர் பங்கேற்றனர்.

இந்த நிகழ்ச்சியில் நான் முதல்வன் மென்டர்ஷிப் போர்ட்டல் சேவை, கல்லூரி கனவு 2024 ஆகியவற்றை துவக்கி வைத்து பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், கோவை மாவட்டத்தில் உள்ள மாணவ,மாணவிகளை சந்திப்பதில் கூடுதல் மகிழ்ச்சி எனவும் சுதந்திரத்திற்கு பிறகு பள்ளிகள் அதிகளவில் துவக்கபட்டன.

இரண்டு தலைமுறைக்கு முன் தான் கல்லூரிகள் துவக்கப்பட்டன என குறிப்பிட்டவர் தமிழகத்தின் முன்னேற்றத்தை தனித்தனியாக வளர்தெடுத்தவர் கலைஞர் எனவும் அதிகளவில் கல்லூரிகள் திறக்கபட்டது கலைஞரின் ஆட்சியில்தான், தொழிற்சாலைகள் அதிகம் உருவானதும் கலைஞர் ஆட்சியில்தான் எனவும் தெரிவித்தார். கல்விக்கு அடுத்தபடியாக திறன்மேம்பாட்டு மற்றும் தொழில் முனைவோரை உருவாக்கவும் முதல்வர் அவர்கள் நான் முதல்வன் திட்டத்தை துவக்கினார் என்றார். 

 

இந்த திட்டத்தின் கீழ் 28 லட்சம் மாணவ,மாணவிகள் இதுவரை  பயனடைந்துள்ளன்னர் எனவும் கல்லூரிகளில் மட்டுமின்றி பள்ளிகளிலும் இத்திட்டம் செயல்படுத்தபட்டுள்ளது என தெரிவித்தார்.

இன்றைய தினம் 1800 பணிநியமன ஆணைகளை வழங்குவதன் மூலம் அவர்களின் ஒவ்வொரு 
குடும்பங்களில் ஒளி ஏற்றி வைத்துள்ளார் முதல்வர் என பெருமிதம் தெரிவித்த உதயநிதி ஸ்டாலின், வேலைக்கு மட்டுமல்லாமல் அவர்களை அடுத்த நிலைக்கு எடுத்து செல்வதற்கான துருப்பு சீட்டாக இந்த திட்டம் உள்ளது எனவும் தெரிவித்தார். தொடர்ச்சியாக திறன் பயிற்சி பெற்று சாதித்த மாணவர்களின் பெயர்களை பட்டியலிட்ட உதயநிதி,அன்று திருப்பூரில் வருமானத்திற்கு கஷ்டபட்ட குடும்பம் இன்று வருமான வரி கட்டும் அளவிற்கு உயர்ந்துள்ளது, 

இதுதான் இந்த திட்டத்தின் சாதனை எனவும் தெரிவித்தவர் இளைஞர்கள் வென்றால் தான் தமிழ்நாடு வெற்றி பெறும் என்பதை உணர்ந்து கொள்ளுங்கள் எனவும் பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கு விளையாட்டு துறை அமைச்சராக நான் தனது வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன் என வாழ்த்துகளை தெரிவித்து கொண்டார்..

தயவு செய்து விளையாட்டு நேரத்தை கடன் வாங்கி பாடம் நடத்துவதை தவிர்த்து விளையாடுவதற்காக கொடுங்கள் எனவும் நம்முடைய மாணவர்கள் விளையாட்டு துறையிலும் சாதனை களை நடத்தி வருகின்றனர் என ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தினார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe