முருக பக்தர்களே உங்களுக்காக ஒரு மாநாட்டை எடுக்கிறது தமிழ்நாடு!

published 11 months ago

முருக பக்தர்களே உங்களுக்காக ஒரு மாநாட்டை எடுக்கிறது தமிழ்நாடு!


கோவை: தமிழ் கடவுளான முருகப் பெருமானுக்கு உலகம் முழுவதும் உள்ள அனைத்து பக்தர்கள் சேர்ந்து பல கொண்டாட்டங்களை மேற்கொள்ளவும், முருகனின் மகிமைக்குப் புகழ் சேர்க்கும் விதத்தில் உலக முருக பக்தர்களுக்கான மாநாட்டைப் பழனி மலையில் நடத்த முடிவெடுக்கப்பட்டுள்ளதாக  அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.

இந்து சமய அறநிலையத் துறை சார்பில் ஆலோசனைக்  கூட்டம் தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அமைச்சர் சேகர்பாபு மற்றும் தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா ஆகியோரும் பங்கேற்றனர்.

இந்த கூட்டத்தில், அறநிலையத் துறை சார்பில் பதிப்பகப் பிரிவின் மூலம், 2-வது கட்டமாக, பல கோயில்களின் தல வரலாறு, தலபுராணங்கள் மற்றும் நாட்டுடைமையாக்கப்பட்ட பக்தி இலக்கியங்கள் என மிகப் பழமையான நூல்கள் மறுபதிப்பு செய்யப்பட்டு மொத்தம் 108 அரிய பக்தி நூல்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.

இந்த அற நிலைய துறையினுடனான கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சேகர்பாபு, “நம் தமிழ் நாட்டில்  ஏற்கெனவே உள்ள 108 புத்தக விற்பனை மையங்களின் வரிசையில் , மேலும் புதிதாக 100 கோயில்களில் புத்தக விற்பனை மையங்கள் ஏற்படுத்தப்பட உள்ளதாக முடிவெடுக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி நிதி வசதியற்ற 500 கோயில்களில் திருப்பணிகள் மேற்கொள்ள முதல்வர் உத்தரவிட்டுள்ளார். தமிழ் கடவுளான முருகப் பெருமானுக்கு உலகம் முழுவதும் உள்ள அனைத்து பக்தர்கள் சேர்ந்து பல கொண்டாட்டங்களை மேற்கொள்ளவும், முருகனின் மகிமைக்குப் புகழ் சேர்க்கும் விதத்தில் உலக முருக பக்தர்களுக்கான மாநாட்டைப் பழனி மலையில் நடத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது.” என்றார்  

மேலும் வேளாக்குறிச்சி சத்யஞான மகாதேவ பரமாச்சாரிய சுவாமிகள் செய்தியாளர்களிடம் கூறுகையில், “நிதிவசதி இல்லாத கோயில்கள் திருப்பணிக்கென  முதல்கட்டமாக 500 கோயில்களுக்கு ரூ.50 கோடி மதிப்பீட்டில் திருப்பணிகள் மேற்கொள்ளுதல், அர்ச்சகர், பணியாளர்களுக்கு ரூ.20 கோடி மதிப்பீட்டில் புதிதாக 100 குடியிருப்புகள் உள்ளிட்ட 10 தீர்மானங்கள் கூட்டத்தில் முன்மொழியப்பட்டு நிறைவேற்றப்பட்டன. இவையனைத்தும் நல்ல திட்டங்கள் என்பதால் அனைத்து ஆதீனங்களும் ஒப்புதல் அளித்தோம்.” என்று கூறினார்.

இக்கூட்டத்தில் ஆலோசனைக் குழு உறுப்பினர்கள் திருவண்ணாமலை ஆதீனம் பொன்னம்பல தேசிக பரமாச்சாரிய சுவாமிகள், திருவாவடுதுறை ஆதீனம் அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சுவாமிகள், பேரூர் ஆதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகளார், ஆன்மீக பேச்சாளர்சுகி.சிவம், மு.பெ.சத்தியவேல் முருகனார், ந.ராமசுப்பிரமணியன், தரணிபதி ராஜ்குமார், மல்லிகார்ஜுன சந்தான கிருஷ்ணன், ஸ்ரீமதி சிவசங்கர், தேச மங்கையர்க்கரசி ஆகியோரும் பங்கேற்றனர்

சிறப்பு அழைப்பாளர்களாக, மயிலம் பொம்மபுர ஆதீனம் சிவஞான பாலய சுவாமிகள், தூத்துக்குடி செங்கோல் ஆதீனம் சிவப்பிரகாச தேசிக சத்திய ஞான சுவாமிகள், சூரியனார் கோயில் ஆதீனம் மகாலிங்க தேசிக பரமாச்சாரிய சுவாமிகள், வேளாக்குறிச்சி ஆதீனம் சத்திய ஞான மகாதேவ தேசிக பரமாச்சாரிய சுவாமிகள், குமர குருபர சுவாமிகள், கவுமார மடம், அருள் நாகலிங்கம், மெய்யப்பன், வெற்றிவேல், அருள்நந்தி சிவம் ஆகியோர் பங்கேற்றனர்

முருக பக்தர்களுக்கான மாநாட்டை எந்த தேதியில்,என்னென்ன சிறப்பம்சங்களோடு நடத்துவது என்பது குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe