பொள்ளாச்சி ஆனைமலை தென்னை விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு...

published 11 months ago

பொள்ளாச்சி ஆனைமலை தென்னை விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு...

கோவை: பொள்ளாச்சி தெற்கு, வடக்கு மற்றும் ஆனைமலைப் பகுதி தென்னை விவசாயிகளுக்கு தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது,

இது குறித்து பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தென்னையில் தற்போது காணப்படும் வேர்வாடல் நோயின் பாதிப்பு குறித்து ஆய்வு மற்றும் புள்ளி விவரம் சேகரித்திட தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக விஞ்ஞானிகள், அலுவலர்கள் மற்றும் ஆராய்ச்சி மாணவர்கள் நாளை 02.03.2024 காலை நேரடியாக தோப்புகளுக்கு கிராமம் வாரியாக வரவிருக்கிறார்கள். எனவே பாதிக்கப்பட்ட கிராமங்களைச் சார்ந்த விவசாயப் பெருமக்கள் தென்னந்தோப்பில் எத்தனை மரங்கள் வேர்வாடல் நோயால் பாதிக்கப்பட்டுள்ளன. 

சேதாரத்தின் மதிப்பு மற்றும் கட்டுப்பாட்டிற்கு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் போன்ற தகவல்கள் தெளிவாக தெரிவிக்கவும். மேலும் புகைப்படம், பண்ணை வரைபடம், ஆதார் அட்டை ஒரிஜினல் மற்றும் ஒரு நகலுடன் தயாராக இருக்குமாறு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், தோட்டக்கலை மற்றும் வேளாண் துறையால் கேட்டுக்கொள்ளப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe