மோடி எங்கு போட்டி? பா.ஜ., முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு..!

published 11 months ago

மோடி எங்கு போட்டி? பா.ஜ., முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு..!

நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ., வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதிகள் குறித்த விவரங்களை அக்கட்சி தலைமை வெளியிட்டுள்ளது.

முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலில் மொத்தம் 195 பேரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. இந்த பட்டியலில் தமிழகத்தின் வேட்பாளர் பட்டியல் இடம்பெறவில்லை என்றாலும் பிரதமர், அமைச்சர்கள் என பா.ஜ.,வில் மூத்த நிர்வாகிகள் போட்டியிடும் தொகுதிகளின் விவரங்களை கட்சித்தலைமை வெளியிட்டுள்ளது.

அதன் விவரம் பின்வருமாறு:

பிரதமர் நரேந்திரமோடி கடந்த தேர்தலில் ஏற்கனவே போட்டியிட்டு வெற்றி பெற்ற வாரணாசி தொகுதியிலேயே இந்த தேர்தலிலும் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தேர்தலில் தற்போது மத்திய அமைச்சரவையில் உள்ள 34 மத்திய அமைச்சரகள் போட்டியிடுகின்றனர். முதற்கட்ட பட்டியலில் 47 இளைஞர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக பா.ஜ., தலைமை அறிவித்துள்ளது.

அமித்ஷா காந்திநகர் தொகுதியில் போட்டியிடுகிறர். சர்பானந்த சோனாவால் அசாம் திப்ரூகர் தொகுதியில் போட்டியிருகிறார்.
மன்சுக் மாண்டவியா போர்பந்தர் தொகுதியிலும், சுஷ்மா சுவராஜ் மகள் பன்சூரி ஸ்வராஜ் டில்லி தொகுதியில் போட்டியிடுகிறார்.

மலையாள நடிகர் நடிகர் சுரேஷ் கோபி திருச்சூர் தொகுதியில் போட்டியிடுகிறார். கிரிண் ரிஜிஜூ அருணாச்சல பிரதேசத்தில் போட்டி

திருவனந்தபுரம் தொகுதியில் ராஜீவ் சந்திரசேகரும், ஜோதிராதித்யா சிந்தியா ம.பி., குணா தொகுதியிலும் போட்டியிடுகின்றனர்.

பாதுகாப்புதுறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கடந்த தேர்தலில்.வெற்றி பெற்ற லக்னோ தொகுதியிலேயே போட்டியிடுகிறார்.

மறைந்த சுஷ்மா ஸ்வராஜ் மகள் பன்சூரி ஸ்வராஜ் டில்லி தொகுதியிலும், சபா நாயக ஓம் பிர்லா கோட்டா தொகுதியிலும், நடிகை ஹேமாமாலினி மதுரா தொகுதியிலும்  போட்டியிடுகின்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe