கொடிசியாவில் தியானத்தில் இறங்கிய கோவை மக்கள்...!

published 11 months ago

கொடிசியாவில் தியானத்தில் இறங்கிய கோவை மக்கள்...!

கோவை: கோவை கொடிசியா அருகே தனியார் ஹோட்டலில்  வாழும் கலை அமைப்பின் தலைவர் 
ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது
மனஅழுத்தம் , தற்கொலை அதிகரித்து வருகின்றது எனவும்,4 பேரில் ஒருவர் மன அழுத்ததில் இருக்கின்றனர் எனவும் 40 வினாடிக்கு ஒரு தற்கொலை நடைபெறுகின்றது எனவும் தெரிவித்தார்.


இதில் இருந்து விடுபட தியானம் அவசியம் என தெரிவித்த அவர்,
தியானத்தில் மதம் இல்லை.
அனைத்து மதமும் சம்மதமே என தெரிவித்த அவர்,கோவையில் இன்று தியான நிகழ்வில் கலந்து கொள்ளவே வந்துள்ளதாகவும் தெரிவித்தார்.

மாணவர்களுக்கு
பரிட்சை, மக்களுக்கு வேலை  என ஓவ்வொருவருக்கும் நிறைய  டென்சன் இருக்கின்றது எனவும்,
இதில் இருந்து விடுதலை பெற தியான நிலை மேற்கொள்வது அவசியம் எனவும் தெரிவித்த அவர்,
போதை பொருளுக்கு அடிமையாவது அதிகரித்து வருகின்றது எனவும் தெரிவித்தார்.
 

பஞ்சாப. ஹரியானா மாநிலங்களில் போதைக்கு எதிரான விழிப்புணர்வு தியான நிகழ்வுகளை நடத்தினோம் என தெரிவித்த அவர்,
தமிழகத்திலும் போதை பொருள் நடமாட்டம் அதிகரித்து இருக்கின்றது எனவும்,
தமிழகத்தில் போதைக்கு எதிரான விழிப்புணர்விற்காக தியான நிகழ்வு நடத்தப்படுகின்றது எனவும் தெரிவித்தார. ஹைதராபாத் கேரளா போன்ற இடங்களிலும் போதைப் பொருளுக்கு எதிரான நிகழ்வுகளை நடத்தி வருகிறோம் என்றும் அவர் தெரிவித்தார்.


நாகநதி திட்டம் சிறப்பாக செயல்படுகின்றது என தெரிவித்த அவர், தமிழகத்தில் 
85 நதிகள் ஆவணங்களில் இருக்கிறது, ஆனால்  சில நதிகள் மட்டுமே ஓடுகின்றது எனவும், மற்ற நதிகளை புனரமைக்க வேண்டிய தேவை இருக்கின்றது எனவும் தெரிவித்தார்.
 

கோவையில்
கௌசிகா நதி, நொய்யல் நதி புனரமைக்க பட வேண்டும் எனவும், தமிழகத்தில் 
85 நதிகளையும் மீட்டால்  தமிழகத்தில் சுற்றுசுழல் பிரச்சினை,  தண்ணீர் பிரச்சினை இருக்காது, தண்ணீர் பிரச்சினை
முடிவுக்கு வரும் என்றும் தெரிவித்தார்.

பொறியியல் கல்லூரிகளில் கூட தியானம் பாடம் சொல்லி கொடுக்கின்றனர் எனவும்,
அமெரிக்காவில் 108 பல்கலைகழகங்களில் தியானம் செய்தால் அதுக்கு  மார்க் கிடைக்கும் என்றும் தெரிவித்தார்.
மன அழுத்ததை போக்க முடியாத நிலையிலேயே தற்கொலைகள் நடைபெறுகின்றன என தெரிவித்த அவர்,
போதை பொருள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த 
கண்டிப்பான விதிகளை
கொண்டு வரவேண்டும் எனவும், பஞ்சாப் ,ஹரியானா மாநில பகுதிகளை பார்த்தால் கண்ணீர் வரும், அந்த அளவிற்கு போதை பொருளால் இளைஞர்கள்  பாழகி  கொண்டு இருக்கின்றனர்,
வேலைக்கு செய்வது இல்லை என தெரிவித்த அவர்,
தமிழகத்தில் அதுபோன்ற நிலை வந்துவிடக்கூடாது என்பதற்காக விழிப்புணர்வு நிகழ்வு நடத்துகின்றோம் எனவும் தெரிவித்தார்.
 

போதை பொருளை கட்டுப்படுத்த அரசு
பாலிசி வகுத்து அதை முறையாக செயல்படுத்துதல் மூலமும்,  மக்கள் இவற்றை  வெறுப்பதன் மூலமே ஒழிக்க முடியும். இதை அடித்தளத்தில் இருந்து கொண்டு வந்தால் மட்டுமே முடியும் என ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து கொடிசியா வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பிரம்மாண்ட மேடையில் சத்சங் நிகழ்வில் வாழும் கலை அமைப்பின் நிறுவனர் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் கலந்து கொண்டு தியானமுறைகளை பல்லாயிரக்கணக்கான மாணவ மாணவியருக்கு சொல்லிக் கொடுத்ததுடன் போதை பொருளுக்கு எதிரான உறுதி மொழியையும் மாணவர்களை எடுக்க செய்தார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe