உலக மகளிர் தினத்தை முன்னிட்டு கோவையில் பெண் காவலர்களுக்கான மாரத்தான் போட்டி...

published 11 months ago

உலக மகளிர் தினத்தை முன்னிட்டு கோவையில் பெண் காவலர்களுக்கான மாரத்தான் போட்டி...

கோவை: உலக மகளிர் தினத்தை முன்னிட்டு ஆயுதப்படை பெண் காவலர்களுக்கான மராத்தான் போட்டியை தலைமையிட துணை காவல் ஆணையாளர் சுகாசினி கொடியசைத்து துவக்கி வைத்தார்.

 

மகளிர் தினம் நாடும் முழுவதும் பெண்களுக்கு மரியாதை செலுத்து விதமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதனை ஊக்குவிக்கும் வகையில் கோவை மாநகர ஆயுதப்படையில் பணியாற்றி வரும் பெண் காவலர்களுக்கான மாரத்தான் ஓட்டம் இன்று நடைபெற்றது.

மாரத்தான் ஓட்டத்தை கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலக தலைமையிட துணை ஆணையாளர் சுகாசினி  துவங்கி வைத்தார்.
மாரத்தான் ஓட்டத்தில் ஏராளமான ஆயுதப்படை பெண் காவலர்கள் கலந்து கொண்டு ஓடினர்.

 

இந்த மாரத்தான் ஓட்டம் கோவை மாநகர ஆயுதப்படை கவாத்து மைதானத்தில் துவங்கி டாக்டர் பாலசுந்தரம் ரோடு,அவிநாசி ரோடு, ரேஸ்கோர்ஸ் ஆகிய பகுதிகளுக்கு சென்று மீண்டும் கோவை மாநகர ஆயுதப்படை கவாத்து மைதானத்தில் நிறைவு பெற்றது.

மரத்தான் ஓட்டத்தில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற பெண் காவலர்களுக்கு காவலர் ஆணையர் பாலகிருஷ்ணன் பரிசுகள் வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் மாநகரத் துணை ஆணையாளர் சரவணன், ஆயுதப் படை உதவி ஆணையாளர் சேகர், ஆய்வாளர் , பிரதாப் கோவிந்தராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe