ரமலான் நோன்பு கஞ்சி தயார் பன்னனுமா? கேட்குது கோவை மாவட்ட நிர்வாகம்!

published 11 months ago

ரமலான் நோன்பு கஞ்சி தயார் பன்னனுமா? கேட்குது கோவை மாவட்ட நிர்வாகம்!

கோவை: இஸ்லாமியர்கள் ரமலான்  பண்டிகை நோன்பு கஞ்சிக்கு பச்சரிசி தேவைப்பட்டால் பட்டியல் அனுப்புமாறு பள்ளிவாசல்களுக்கு மாவட்டம் நிர்வாகம் அறிவித்துள்ளது.

இது குறித்து மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  
கோயம்புத்தூர் மாவட்டத்தில் ரமலான் நோன்பு கடைப்பிடிக்கும் இஸ்லாமியமக்களுக்கு புனித ரமலான் மாதத்தில் நோன்பு கஞ்சி தயாரிக்க ஒவ்வொருஆண்டும் பள்ளி வாசல்களுக்கு பச்சரிசி தமிழக அரசால் வழங்கப்பட்டு வருகிறது. கடந்தாண்டுகளை போலவே 2024-ஆம் ஆண்டிலும் ரமலான் மாதத்தில் நோன்பு கஞ்சி தயாரிக்க பள்ளி வாசல்களுக்கு அரிசி வழங்க வேண்டும் என்று இஸ்லாமிய மக்களிடமிருந்து கோரிக்கைகள் வரப்பெற்று வருகின்றன.

2024-ஆம் ஆண்டு ராமலான் மாதத்தில் நோன்பு கடைப்பிடிக்கும் இஸ்லாமியமக்கள் நோன்பு கஞ்சி வழங்குவதற்கு ஏதுவாக, பள்ளி வாசல்களுக்கு மொத்த அனுமதியின் கீழ் பச்சரிசி பெறுவதற்கு, சென்ற ஆண்டு மொத்த அனுமதியின் கீழ் பச்சரிசி பெற்ற பள்ளி வாசல்களிடமிருந்து தேவைப்பட்டியல் வரவேற்கப்படுகிறது. எனவே பள்ளிவாசல் மொத்த அனுமதிபெற உரிய தேவைப்பட்டியலை கோயம்புத்தூர் மாவட்ட வழங்கல் அலுவலகத்தில் உடன் சமர்ப்பிக்குமாறு பள்ளிவாசல் நிர்வாகத்தினர் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe