இன்று மஹா சிவராத்திரி: சிவனின் பூரண அருளைப் பெற என்ன படைக்கலாம்...! - முழு விவரம்

published 11 months ago

இன்று மஹா சிவராத்திரி: சிவனின் பூரண அருளைப் பெற என்ன படைக்கலாம்...! - முழு விவரம்

சிவராத்திரி என்பது சிவ பெருமனும் பார்வதி தேவியும் ஒன்றி ஒரு ரூபமாக மாறிய திருநாளைக் குறிக்கும்.  சிவனுக்கு உகந்த தினமான இன்று அவருக்கு எந்தப் பொருளைப் படைத்து அவரை ஆனந்தம் அடைய செய்யலாம் என இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

வில்வம்

வில்வ இலையின் மூன்று இலைகளைக் கொண்ட தோற்றம் சிவனின் மூன்று கண்கள் அல்லது திரிசூலத்தின் அடையாளம் எனக் கருதப்படுவதால் வில்வ இலைகள் சிவனிற்கு செய்யப்படும் பூஜையில் முக்கிய இடத்தைப் பிடிக்கிறது.

வில்வத்தின் இலைகள் மற்றும் பழத்தை அவருக்கு காணிக்கையாக அளிப்பது அவரின் ஆன்மாவை அடைந்து நமக்கு பூரண அருளைப் பெற்று தருகிறது என்பது ஐதீகம்.

பால்

சிவனிற்கு பால் அபிஷேகம் செய்வது வழக்கம். இது தூய்மை மற்றும் பக்தியைக் குறிக்கிறது. சிவனிற்கு பால் அபிஷேகம் செய்வதன் மூலம் மனதின் எண்ணத்தில் தூய்மை பெறலாம். இது நீண்ட ஆயுளைப் பெற உதவுகிறது.

தேன்

சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட பூஜைகளில் தவிர்க்கப்படாமல் பயன்படுத்தப்படும் தேன், மங்களகரமானதாக  கருதப்படுவதுடன் இதன் இனிப்பு மற்றும் தூய்மையைக் குறிக்கும் குணம், தூய்மையான, இனிமையான பக்தியின் சைகையாக கருதப்படுகிறது.

சிவனிற்கு தேன் அபிஷேகம் செய்வதும் நைவேத்தியம் செய்வதும் வாழ்வில் இனிமை சேர்த்து மகிழ்ச்சியைக் கூட்ட வல்லது.

தயிர்

சிவனின் அபிஷேகத்தில் இடம் பெறும் மற்றொரு முக்கியப் பொருள் தயிர். இதன் வெண்மை நிறம் சிவபெருமானின் மனதைக் குளிர்வித்து அனைத்து வகையான பிரச்சனைகள் மற்றும் தடைகளை நீக்க உதவுகிறது என்று நம்பப்படுகிறது.

குழந்தை பாக்கியம் பெறவும், குழந்தைகளின் வாழ்க்கை சிறக்கவும் இது வழி செய்கிறது.

நெய்

தூய்மை, ஞானம் மற்றும் செழிப்பு ஆகியவற்றின் அடையாளமாக சிவபெருமானுக்கு நெய் வழங்கப்படுகிறது. நெய் அபிஷேகம் செய்வதின் மூலம் மனித வாழ்விலிருந்து  மோக்ஷம் பெறலாம் என்பது நம்பிக்கை. இது வாழ்க்கையில் நேர்மறை ஆற்றலைக் கொண்டு வரவும், செறிவு, ஞாபக சக்தியை ஆகியவற்றைப் பெறவும் உதவுகிறது.

இதையும் படிக்கலாம் ஈஷா மகாசிவராத்திரி விழாவில் இலவசமாக பங்கேற்பது எப்படி?

சந்தனம்

தூய்மை மற்றும் குளிர்ச்சியின் அடையாளமாக சிவலிங்கத்தின் மீது சந்தனம் சாற்றி அலங்காரம் செய்வது வழக்கம். சந்தனம் ஆன்மீக வளர்ச்சி மற்றும் உள் அமைதியைத் தர வல்லது. லக்ஷ்மி தேவிக்கும் உகந்த இந்த சந்தனத்தை சிவனுக்கு அளிப்பதன் மூலம் அமைதி, சந்ததி விருத்தி, அதிர்ஷ்டம், செல்வம், புகழ் மற்றும் செழிப்பு ஆகியவற்றைப் பெறலாம் என நம்பப்படுகிறது.

இலந்தை பழம்

சிவனுக்கு மிகவும் பிடித்தமான பழங்களில் ஒன்றாகக் கருதப்படும் இலந்தை பழத்தை மகா சிவராத்திரி அன்று அவருக்கு பிரசாதமாக வழங்கி அவரின் பூரண ஆசியைப் பெறவது வட இந்தியாவில் பரவலான வழக்கம்.

பத்ரிநாத்தில் கோவில் கொண்டுள்ள சிவபெருமானுக்கு இலந்தை பழம் முக்கிய பிரசாதமாக வழங்கப்படுவது கூடுதல் தகவல்.

சிவனிற்கு பிடித்த இந்தப் பொருட்களை அவரிக்கு அளித்து சிவனின் அருளைப் பெற வாழ்த்துக்கள்.

இந்த செய்தித் தொகுப்பை உங்கள் குடும்பத்தினருடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe