கோவையில் கார் ஷோரூம் உரிமையாளர் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை!

published 11 months ago

கோவையில் கார் ஷோரூம் உரிமையாளர் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை!

கோவை: கோவையில் கார் ஷோரூம் உரிமையாளர் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று திடீர் சோதனை நடத்தி வருகின்றனர்.

கோவை ராமநாதபுரம் அடுத்த கிருஷ்ணசாமி நகரில் கார் ஷோரூம் உரிமையாளர் அனீஸ் என்பவரது வீடு உள்ளது.

இவரது வீட்டுக்கு இன்று காலை 8 மணியளவில் 3 கார்களில் 15க்கும் மேற்பட்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் வந்தனர். அவர்கள் வீட்டில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடந்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில், இந்த சோதனை நடந்து வருவதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

அமலாக்கத்துறையினர் வீட்டில் உள்ள ஆவணங்களை கைப்பற்றி தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். சோதனை முடிவில்தான், வழக்குப்பதிவு உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படுமா? என்பது குறித்த தகவல் வெளியாகும்.

அமலாக்கத்துறையினர் சோதனையை முன்னிட்டு அங்கு மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். நாடாளுமன்ற தேர்தல் நெருங்குவதால் ஒன்றிய அரசின் அமலாக்கத்துறை கோவை மட்டுமல்லாது சில இடங்களில் இன்று சோதனை நடத்தி வருவது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.

அரசியல் கட்சி பிரமுகர்கள் மற்றும் தொழில் அதிபர்களை மிரட்டும் நோக்கில் இந்த சோதனையை ஒன்றிய அரசு ஏவி விட்டுள்ளதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe