வெள்ளியங்கிரி மலை; எல்லாருக்குமானது அல்ல: செய்தியாளர் ஆவுடையப்பனின் பதிவு!

published 11 months ago

வெள்ளியங்கிரி மலை; எல்லாருக்குமானது அல்ல: செய்தியாளர் ஆவுடையப்பனின் பதிவு!

கோவை: தனியார் நிறுவனத்தில் நெறியாளராம ஆவுடையப்பன் மஹாசிவராத்திரியை முன்னிட்டு கோவை வெள்ளியங்கிரி மலைக்கு யாத்திரை சென்றுள்ளார்.

வெள்ளியங்கிரி மலையேற்றம் தொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவு பின்வருமாறு:

சில நாட்களுக்கு முன்பு வெள்ளியங்கிரி மலைக்குச் சென்று இருந்தோம்.. வெள்ளியங்கிரிக்கு என்னுடைய முதல் பயணம் அது..

ஏழு மலைகள் எனச் சொன்னதும் மலைப்பாய் இருந்தது உள்ளபடியே பெரிய சவாலாகத் தான் அமைந்ததது..

அதுவும் மலை ஏறத்தொடங்கியது மதியம் என்பதால் வெய்யிலின்  தாக்கத்தில் உடல் 
De-Hydration ஆக மெதுவாகவே நடக்கத்தொடங்கினோம்.. நான் முதல் முறை என்பதால் பகலில் ஏற நினைத்தோம்..ஆனால் இரவு தான் சரியான நேரம்..

வழி நெடுக நிறைய வாலிப பசங்க மற்றும் 35-45 வயது மதிக்கத்தக்க ஆண்கள் எனப் பலரும் மலை ஏறினார்கள். வழி நெடுக காதில் கேட்ட அல்லது பார்த்த காட்சி :

டேய் இன்ஸ்டாகிராமில் ஈசி என சொன்னாங்க? Youtube-ல இப்படி காட்டலயே டா.. என பலர் புலம்பியதை தான் பார்க்கவும்,கேட்கவும் முடிந்தது..

இதை ஏன் குறிப்பிட்டு எழுதுகிறேன் என்றால் இன்று Influencer Digital Market பெரிதாக இருக்கிறது,2025-இல் 2,500 கோடியாக இருக்கும் என்கிறது ஒரு ஆய்வு..

பலர் இது போல வீடியோக்களை நம்பி ஈசி என  நினைத்து வந்துவிடுகிறார்கள்..

இப்படி Digital influencers தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துவரும் இந்த நேரத்தில் வீடியோக்களில் சிலர் முழுமையாக தகவல்களை சொல்லாமல் விடுவதனால் பின்விளைவுகள் பலருக்கு மோசமானதாக அமைந்துவிடுகிறது..

பலருக்கு நாட்பட்ட சர்க்கரை நோய்,உயர் ரத்த அழுத்தம்,இதயப்பிரச்சனை என நிறையப் பிரச்சனைகள் இருக்கிறது பலருக்கு அங்கு வந்தே தெரிகிறது..

அவர்கள் மற்றவர்கள் நடக்கிறார்கள் நாமும் நடப்போம் என சரியான ஓய்வு இல்லாமல் நடக்க முயற்சி செய்யும் பொழுது..அது உயிருக்கே ஆபத்தாய் முடிந்துவிடுகிறது...

மருத்துவர்கள் ஆலோசனை ஏதும் இன்றி இது போல மலை ஏற வருகிறார்கள்-காரணம் தவறாக வழிநடத்தப்படும் சில வீடியோஸ்..

இது வரை மலை ஏறி நிறைய நபர்கள் மூச்சுவிடச் சிரமப்பட்டு மலையில் இறந்து இருக்கிறார்கள்.நாங்கள் போன சில நாட்களுக்கு முன்பு கூட அது நடந்து இருக்கிறது..

அது மட்டும் அல்லாது மேலே தங்க எந்த ஒரு கூடாராமும் கிடையாது.. நீங்கள் மேலே சென்றால் அப்படியே அதே போல கீழே இறங்கி ஆக வேண்டும்..

முதல் முறை பலருக்கும் நிச்சயம் 6-8மணி நேரம் வரை கூட ஆகலாம் மேல ஏற!  நீங்கள் ஏறியபடியே கீழே இறங்க வேண்டும்..
அங்கு தான் சிக்கல்.மேலே செல்லும் போது இருக்கும் ஜோஸ் நிச்சயம் கீழே இறங்கும் பொழுது இருக்காது.இங்கே தான் உங்கள் உடலை வருத்தி இறங்கும் பொழுது உங்கள் உடலில் பிரச்சனை வருகிறது..

ஓய்வு எடுத்து துாங்கி எழுந்து வர ஒதுங்கு இடம் எல்லாம் கிடையாது..

பலர் கையோடு  பழைய Banners,Bedsheet எடுத்து செல்லுவதால் கிடைக்கும் இடத்தில் துாங்கி எழுந்துவிடுகிறார்கள்..

6,7 மலையில் உள்ள Climate நீங்கள் கணிக்கவே முடியாது. முதல் ஐந்து மலைகள் வெய்யில் வாட்டி வதைக்கும்,அடுத்து ஆறு & ஏழுவாது மலை குளிர்வாட்டி வதைக்கும்.. அங்கு சரியான குளிர்தாங்க கூடிய உடை இல்லாமல் சென்றால் கதை அவ்வளவு தான்..

முக்கியமாக நான் குறிப்பிட நினைத்தது மற்ற கோவில் தலங்கள் போல வெள்ளியங்கிரி அல்ல.. நல்ல உடல் ஆரோக்கியத்துடன் இருப்பவரகள் செல்ல வேண்டிய இடம் அது.அல்லது மருத்துவரை ஒரு முறை ஆலோசனை கேட்டுக்கொள்ளுங்கள்..

அவசர உதவி என்றால் கூட மேலே இருந்து கீழே போனில் தொடர்புகொண்டு உதவி கேட்டால் கீழே இருந்து மேல டோலி அனுப்புவார்கள்.இது தான் நடைமுறை..

ஆர்வமிகுதியில் முயற்சி செய்யக்கூடாத இடம் வெள்ளியங்கிரி..

சற்று உடல் பருமனாக இருப்பவர்கள் அனைவரும் Un-Fit'ம் இல்லை. Slim ஆக இருக்கும் அனைவரும் Fit-ம் இல்லை..

- ஆவுடையப்பன்

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe