Traffic Alert: கோவையில் இன்று போக்குவரத்து மாற்றம்...!

published 11 months ago

Traffic Alert: கோவையில் இன்று போக்குவரத்து மாற்றம்...!

கோவை: தமிழக முதலமைச்சர் இன்று பொள்ளாச்சியில் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குவதற்கு வருகிறார். இதனையொட்டி காலை 8 மணி முதல் மதியம் 1 மணி வரை  கோவையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாக மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது.

இது தொடர்பாக கோவை மாவட்ட போலீசார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு பின்வருமாறு:

கனரக வாகனங்கள்

1.பொள்ளாச்சியிலிருந்து கோவை நோக்கி செல்லும் கனரக வாகனங்கள் காந்தி சிலையிலிருந்து பாலக்காடு ரோட்டில் முத்தூரில் வலதுபுறம் திரும்பி T. நல்லிகவுன்டன்பாளையம் வழியாக C.கோபாலபுரம் சென்று  வடக்கிபாளையம் சாலையை அடைந்து வடக்கிபாளையம்  சென்று சூலக்கல் வழியாக ரூட்ஸ் கம்பெனியில் இடது புறம் திரும்பி கோவை சொல்ல வேண்டும்.

2.கோயம்புத்தூரிலிருந்து பொள்ளாச்சி உடுமலை நோக்கி வரும் கனரக வாகனங்கள் கோவில்பாளையத்தில் இடதுபுறம் திரும்பி நெகமம் ரோட்டில் கக்கடவு வழியாக நெகமம் நால் ரோடு வந்து பல்லடம் பொள்ளாச்சி ரோட்டில் கரப்பாடி பிரிவு வழியாக அனுப்பர்பாளையம் திப்பம்பட்டி வழியாக சொல்ல வேண்டும். மேலும், ஆனைமலை பாலக்காடு திருச்சூர் செல்லும் வாகனங்கள் நெகமம் ரோட்டில் நேராக புளியம்பட்டி தேர்நிலை வந்து பாலக்காடு சாலையில் செல்ல வேண்டும்.

3.கேரளாவிலிருந்து வாளையார் வழியாக கோவை வரும் கனரக வாகனங்கள் பாலத்துறை சந்திப்பு வழியாக அனுப்பப்படும்.

4.அவிநாசியிலிருந்து கோவை வரும் கனரக வாகனங்கள் கருமத்தம்பட்டி சந்திப்பு வழியே அனுப்பப்படும்.

5.திருச்சி சாலை வழியே கோவை வரும் வாகனங்கள் காரணம்பேட்டை சந்திப்பு வழியே அனுப்பப்படும்.

இலகுரக வாகனங்கள்

6.கோயம்புத்தூரிலிருந்து பொள்ளாச்சி உடுமலை நோக்கி வரும் இலகுரக வாகனங்கள் குள்ளக்காபாளையம்   BVN School சந்திப்பில் இடதுபுறம் திரும்பி தொப்பம்பட்டி வந்து நெகமம் ரோட்டில்  பொள்ளாச்சி அடையவும்.

7.பொள்ளாச்சியிலிருந்து கோவை நோக்கி செல்லும்  இலகுரக வாகனங்கள் வடக்கிபாளையம் பிரிவில் இடதுபுறம் திரும்பி வடக்கிபாளையம் ரோட்டில் வடக்கிபாளையம்  சென்று சூலக்கல் வழியாக ரூட்ஸ் கம்பெனியில் இடது புறம் திரும்பி கோவை ரோட்டை அடைந்து கோவை செல்ல வேண்டும்.

என போலீசார் தெரிவித்துள்ளனர்.

இந்த அறிவிப்பை கோவை மக்களுக்கு பகிரவும்

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe