CAA சட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி கோவையில் மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம்...

published 11 months ago

CAA சட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி கோவையில் மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம்...

கோவை: கோவை உக்கடம் பகுதியில் எஸ் டி பி ஐ கட்சி சார்பில் குடியுரிமை திருத்த சட்ட மசோதாவை ரத்து செய்ய வலியுறுத்தி 
மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம் நடைபெற்றது.

 

CAA சட்டத்தை ரத்து செய்ய கோரி கோவை மத்திய மாவட்ட SDPI  கட்சியின் சார்பாக  உக்கடம் வள்ளியம்மை பேக்கரி முன்பாக
"மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டம்" நடைபெற்றது. 

அக்கட்சியின் மாவட்ட துணைதலைவர் அப்துல் ரஹிம் தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில்  மாவட்ட தலைவர் முஸ்தபா, பொது செயலாளர் அப்துல் காதர், அபுத்தஹிர் மாநில பேச்சாளர், தொழிற்சங்க மாநில பொது செயலாளர் ரவூப் நிஸ்தார், செயலாளர் இசாக், மாநில செயற்க்குழு உறுப்பினர் சிவக்குமார், பொருளாளர் இக்பால் , தொழிற்சங்க மாவட்ட தலைவர் செய்யது இப்றாஹிம் ,உள்ளிட்ட மாவட்ட, தொகுதி நிர்வாகிகள்  தொழிற்சங்க  நிர்வாகிகள், வர்த்தக அணி   நிர்வாகிகள், விமன் இந்தியா மூவ்மென்ட் சேர்ந்த பெண்கள் குழந்தைகள் உட்பட கட்சியின் செயல்வீரர்கள், உறுப்பினர்கள், ஆதரவாளர்கள், ஜனநாயக முற்போக்கு சிந்தனைவாதிகள் அனைவரும் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர்.

இதில் அப்பகுதியில் நெடுகிலும் நின்று CAA சட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி கையில் மெழுகுவத்தி ஏந்தி   கண்டனங்களை பதிவு செய்தனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe