கோவையில் வழி தவறி ஊருக்குள் புகுந்த ஒற்றை காட்டு யானை- வீடியோ காட்சிகள் உள்ளே...

published 11 months ago

கோவையில் வழி தவறி ஊருக்குள் புகுந்த ஒற்றை காட்டு யானை- வீடியோ காட்சிகள் உள்ளே...

 கோவை: கோவை, பேரூர் மதுக்கரை வனச் சரகத்திற்கு உட்பட்ட கரடிமடை,, மாதம்பட்டி இருட்டுப்பள்ளம் உள்ளிட்ட பகுதிகளில் தற்போது 30 க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் முகாமிட்டு உள்ளது. 

மேற்கு தொடர்ச்சி மலையில் நிலவும் கடும் வறட்சி காரணமாக யானைகள் வனப் பகுதியில் இருந்து அருகில் உள்ள கிராமங்களுக்கு படையெடுக்கின்றன. இரவு நேரங்களில் உணவு மற்றும் தண்ணீர் தேவைக்காக கிராமங்களுக்குள் புகும் காட்டு யானைகள் விளை நிலங்களை சேதப்படுத்துவதோடு மட்டுமல்லாமல் வீட்டில் வைத்து இருக்கும் அரிசி, மாட்டுத் தீவனங்களை  சாப்பிடுவதால் பொதுமக்கள் அச்சமடைந்து உள்ளனர். 

இந்நிலையில் ஒற்றை யானை இரவு  மதுக்கரை வனச் சரகத்தில் இருந்து கோவை வனச் சரத்திற்கு உட்பட்ட வேடப்பட்டி கிராமத்திற்குள் புகுந்தது இது குறித்து தகவல் அறிந்த கோவை வனத்துறையினர் யானையை வனப் பகுதிக்குள் விரட்டும் பணியில் ஈடுபட்டனர். 

எனினும் வனத் துறையினருக்கு போக்கு காட்டிய ஒற்றை யானை திடீரென மாயமானது இதனை தொடர்ந்து பேரூர் தமிழ் கல்லூரி அருகே ஒற்றை யானை நிற்பதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது அதன் பேரில்  வனத் துறையினர் அங்கு சென்று பார்த்த போது வனத்துறையினர் தேடி வந்த ஒற்றை யானை அங்கு நிற்பது தெரிய வந்தது இதனை அடுத்து அந்த யானையை வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.

வீடியோ காட்சிகளை காண்பதற்கு லிங்க்கை கிளிக் செய்யவும்…

https://youtube.com/shorts/pCATNQJFwq8?feature=share

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe