கோவை சத்துணவு அமைப்பாளர்களின் கைவண்ணத்தில் தேர்தல் விழிப்புணர்வு கோலங்கள்...

published 11 months ago

கோவை சத்துணவு அமைப்பாளர்களின் கைவண்ணத்தில் தேர்தல் விழிப்புணர்வு கோலங்கள்...

கோவை: வாக்களிக்க வேண்டிய அவசியம் குறித்து கோலம் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திய கோவையை சேர்ந்த சத்துணவு அமைப்பாளர்கள் பலரது கவனத்தை ஈர்த்துள்ளனர்.

 

நாடாளுமன்றத் தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி துவங்கி ஏழு கட்டங்களாக நடைபெறுகிறது. இந்நிலையில் வாக்களிக்க வேண்டிய அவசியம் குறித்து வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வண்ணம் கோவை மாநகராட்சி சத்துணவு அமைப்பாளர்கள் கோலம் வரைந்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட ஒக்கிலியர் காலனி மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி அருகில் மாநகராட்சி சத்துணவு அமைப்பாளர்கள் ஒன்றிணைந்து வாக்களிக்க வேண்டியதன் அவசியம் குறித்து ரங்கோலி கோலமிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

ஷ்காலர் ஷிப்பில் படிக்க DJ Tuition குழுவில் இணையலாம்…

https://chat.whatsapp.com/KR30D92FDtgHxyrSYs10Ms

 

அந்தக் கோலங்களில் "வாக்களிப்பது கடமை அதுவே நமது உரிமை, வாக்கின் வலிமை தேசத்தின் பெருமை, ஒரு விரலில் சரித்திரம் படைப்போம்,  19.04.2024 வாக்களிக்கும் நாள், எனது வாக்கு விற்பனைக்கு அல்ல நாட்டிற்கான எனது முதல் வாக்கு" உள்ளிட்ட வசனங்கள் இடம் பெற்றுள்ளன. 

மேலும் அவர்கள் வரைந்த இரண்டு ஓவியங்களிலும் தேர்தலை குறிப்பிடும் வகையில் வாக்களிக்கும் இயந்திரம் தேசியக்கொடி, வாக்கு மை, தேசிய கொடி, இந்தியா வரைப்படம், முக கவசம் அணிந்த வாக்காளர்களின் ஓவியங்கள் இடம் பெற்றுள்ளன.

இந்த ஓவியங்களை தேர்தல் நடத்தும் உதவி அலுவலர் செல்வ சுரபி நேரில் பார்வையிட்டார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe