நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு, கோவையில் தொடர்ச்சியாக விழிப்புணர்வு...

published 11 months ago

நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு, கோவையில் தொடர்ச்சியாக விழிப்புணர்வு...

கோவை: கோவையில் நமது இலக்கு 100 சதவீத வாக்குபதிவு குறித்து வாக்காளர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சிங்காநல்லூர் பேருந்து நிலையத்தில் என் ஓட்டு, என் உரிமை குறித்த செல்பி பாயிண்ட் மற்றும் மாநகராட்சி கிழக்கு மண்டல அலுவலக வளாகத்தில் கையெழுத்து இயக்கமும் நடத்தப்பட்டது.

 

நாடாளுமன்றத் தேர்தலில் 18வயது பூர்த்தியடைந்த அனைவரும் 100சதவிகித வாக்குப்பதிவை செலுத்திட வலியுறுத்தும் வகையில் பல்வேறு சிறப்பு விழிப்புணர்வு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. 

அதன்படி கோவை மாவட்டத்தில் 100சதவிகித வாக்குப்பதிவு என்ற இலக்கினை அடைய மாவட்ட நிர்வாகம் மாவட்ட தேர்தல் அலுவலகம் சார்பில் வாக்காளர் விழிப்புணர்வு விளம்பர பதாகைகள், சுவரொட்டிகள், துண்டுப்பிரசுரங்கள், கையெழுத்து இயக்கங்கள். குறும்படங்கள், விழிப்புணர்வு பேரணிகள், ரங்கோலி கோலங்கள் உள்ளிட்டவை செயல்படுத்தப்பட்டு வருகின்றது.

ஷ்காலர் ஷிப்பில் படிக்க DJ Tuition குழுவில் இணையலாம்…

https://chat.whatsapp.com/KR30D92FDtgHxyrSYs10Ms

அதன் தொடர்ச்சியாக நாடாளுமன்ற தேர்தலில் 100 சதவீகிதம் வாக்களிப்பதை வலியுறுத்தும் விதமாக சிங்காநல்லூர் பேருந்துநிலையம் மற்றும் வசந்தாமில் பேருந்து நிறுத்தம், ஆகிய இடங்களில் என் ஓட்டு, என் உரிமை என்பது குறித்த செல்பி பாயிண்ட் மற்றும் மாநகராட்சி கிழக்கு மண்டல அலுவலக வளாகத்தில் கையெழுத்து இயக்கமும் நடத்தப்பட்டது. மேலும், காங்கயம்பாளையம் கிராமத்தில் உள்ள ப்ரொபல் கம்பெனியில் பணியாற்றும் ஊழியர்களிடம் வாக்குப்பதிவின்
முக்கியத்துவத்தை வலியுறுத்தி விழிப்புணர்வு உறுதிமொழி எடுக்கப்பட்டது.

கிணத்துக்கடவு புதிய பேருந்து நிலையத்தில் 100% வாக்களிப்பு குறித்து
விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக கோலப்போட்டி நடத்தப்பட்டது.

தொடர்ந்து, வாக்காளர் உறுதி மொழி எடுக்கப்பட்டு மற்றும் விழிப்புணர்வு பேரணியும்
நடத்தப்பட்டது. மேலும், ஆனைமலை வட்டம், அங்கலக்குறிச்சி கிராமத்தில் அமைந்துள்ள, ஸ்ரீ இராமு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்களின் விழிப்புணர்வு பேரணி
நடைபெற்றது. மேலும் மாணவர்களால் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் பொது மக்களுக்கு வழங்கப்பட்டது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe