கோவையில் இரவில் சாலை மறியல் போராட்டம் நடத்திய பெண்கள்!

published 10 months ago

கோவையில் இரவில் சாலை மறியல் போராட்டம் நடத்திய பெண்கள்!

கோவை: கோவை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நீண்ட நாட்களாக குடிநீர் வராமல் பொதுமக்கள் அவ்வப்போது சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், தற்போது வெயில் காலம் ஆரம்பித்ததால் கோவையில் குடிநீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது கோவை மாநகராட்சி 28 வது வார்டு ஆவராம்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் 20 நாட்களாக குடிநீர் வராததால் பொதுமக்கள் தொடர்ந்து சிரமப்பட்டு வந்துள்ளனர். 

ஷ்காலர் ஷிப்பில் படிக்க DJ Tuition குழுவில் இணையலாம்…

https://chat.whatsapp.com/KR30D92FDtgHxyrSYs10Ms

இதுகுறித்து 28 வது வார்டு திமுக மாமன்ற உறுப்பினர் கண்ணகி என்பவரிடம் பலமுறை முறையிட்டும் எந்த பயனும் ஏற்படாததாலும், கடந்த உள்ளாட்சி தேர்தலில் வாக்கு சேகரிப்பதற்கு மட்டுமே மாமன்ற உறுப்பினர் இந்தப் பகுதிக்கு வந்ததாகவும் அதன் பிறகு இந்தப் பகுதிகளில் கவுன்சிலரை பார்த்ததே இல்லை என்றும் ஆவேசமடைந்த பொதுமக்கள்  திடீரென  சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

இதை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பொதுமக்களை சமாதானப்படுத்தி குடிநீர் வினியோகிக்க ஏற்பாடு செய்வதாக உறுதியளித்ததால் பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe