தமிழகத்தில் எங்கும் இல்லாத அளவுக்கு கோவையில் பணமழை பொழியும்- அண்ணாமலை பேட்டி...

published 10 months ago

தமிழகத்தில் எங்கும் இல்லாத அளவுக்கு கோவையில் பணமழை பொழியும்- அண்ணாமலை பேட்டி...

கோவை: டெல்லியலிருந்து நேற்று தமிழகம் திரும்பிய பாஜக மாநில தலைவரும் கோவை பாராளுமன்ற தொகுதி பாஜக வேட்பாளருமான அண்ணாமலைக்கு  கோவை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. 

 

பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அண்ணாமலை, கோவை பாராளுமன்ற தொகுதியை பொருத்தவரை மூன்று வேட்பாளர்கள் இருக்கிறார்கள், மூன்று கட்சிகள் இருக்கிறது, அவர்களுக்குள் போட்டி இல்லை எனவும் கோவை பாராளுமன்றத்தை பொறுத்தவரை 70 ஆண்டுகாலமாக தமிழகத்தில் நடந்து கொண்டிருக்கிற அதர்மம் ஒரு புறமும் தர்மத்தின் ஒரு புறமும் என  நடக்கக்கூடிய தேர்தல் இது என தெரிவித்தார். 

இன்னும் 40 நாட்கள் கோவை மக்கள் பார்ப்பார்கள், தமிழகத்தில் எங்கும் இல்லாத அளவுக்கு கோவையில் பணமழை பொழியும், இலவசங்களை அள்ளித் தெளிப்பார்கள், கட்சிகள் தயாராக இருக்கிறார்கள் என தெரிவித்தவர் திமுகவில் முதலமைச்சரே வந்து கோவையில் 40 நாட்கள் உட்கார்ந்தாலும், பாஜக பாராளுமன்றத்தில் சரித்திர வெற்றி பெறும் என சவால் விடுத்தார்.  தமிழக முதலமைச்சர் கோவையில் 40 நாட்கள்  முகாமிடட்டும் என தெரிவித்த அண்ணாமலை, கோவையில் வளர்ச்சி இல்லை,மாற்றம் வேண்டுமென மக்கள் தெளிவாக இருக்கிறார்கள், டிஆர்பி ராஜா என்ன? திமுகவில் உள்ள அனைத்து நபர்களும் வரட்டும், முதலமைச்சர் வரட்டும் 40 நாட்கள் இருக்கட்டும் நாங்கள் தயார் எனவும் தெரிவித்தார்.

தமிழகத்தின் அரசியல் மாற்றம் கோவையிலிருந்து ஆரம்பமாக வேண்டும் என தெரிவித்த அண்ணாமலை, வளர்ச்சிக்கான அரசியல் கோவையில் இருந்து ஆரம்பமாக வேண்டும் எனவும் 2024 பிரதமர் மூன்றாவது முறையாக வரும்போது கோவை தமிழகத்தின் வரைபடத்தில் இல்லை, இந்தியாவில் வரைப்படத்தில் இல்லை, கோவையை உலக வரைபடத்தில் பதிக்க போகிறோம், அதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை என தெரிவித்தார். மேலும் தமிழகத்தில் பாஜக போட்டியிடும் அனைத்து தொகுதிகளிலும், நண்பர்கள் போட்டியிடக் கூடிய தொகுதிகளிலும் அனைத்து தொகுதிகளுக்கும், வேட்பாளர்களை அறிவித்து இருக்கிறோம், 2024 சரித்திர தேர்தலில் 39 பாராளுமன்ற   வென்று ஒரு பெரிய சரித்திரம் ஜூன் நான்கில்  ஆரம்பமாகும், அதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை என தெரிவித்த அண்ணாமலை, டெல்லி அரசியலில் இருக்க தனக்கு விருப்பமில்லை எனவும் தமிழக அரசியலில் தான் இருப்பேன் எனவும் மோடி தன்னைப் போட்டியிட வேண்டுமென உத்தரவிட்டிருக்கிறார், போட்டியிடுகிறேன், மோடியின் உத்தரவை மதிக்கத் தெரிந்தவன் நான், குறிப்பாக தமிழகத்தில் வளர்ச்சி அனைத்து இடங்களுக்கும் வர வேண்டும், 2024 இல் பாஜக ஆட்சி அமைக்கும்போது தங்களுடைய பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றரை  ஆண்டுகள், இரண்டு ஆண்டுகளில் என்ன மாற்றம் வந்திருக்கிறது  என்பதை மக்களிடம் காட்ட வேண்டும். 

ஷ்காலர் ஷிப்பில் படிக்க DJ Tuition குழுவில் இணையலாம்...

https://chat.whatsapp.com/KR30D92FDtgHxyrSYs10Ms

அதை காட்டினால் மட்டும்தான் 2026 இல் பாஜக தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் வென்று  ஆட்சி அமைக்க முடியும், மோடியின் உத்தரவு மோடியின் உத்தரவுக்கு கட்டுப்பட்டவன் நான், என கேட்டுக் கொண்டதால் கோவையில் போட்டியிடுகிறேன் எனவும் தன்னுடைய அரசியல் தமிழகத்தில் இருக்கும் அதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை, ஆனால் 2026 இல் பாஜக ஆட்சி அமைக்க முற்படும்போது பாஜக பாராளுமன்ற உறுப்பினர்கள் கிடைக்கக்கூடிய இரண்டு ஆண்டுகளில்  முடிவை மாற்றி வளர்ச்சியை வைத்திருப்பார்கள், இது மோடியின் நீண்ட நெடிய திட்டம் என தெரிவித்தார்.
மோடி தமிழகத்திற்கு வருவது பாராளுமன்ற உறுப்பினர்களுக்காக வரவில்லை, 2026 இல் ஆட்சி அமைப்பதற்காக மோடி தமிழகம் வருகிறார், நானூறு எம்பிக்களை பெற்று நாங்கள்  ஆட்சி அமைத்தாலும், எங்கள் குறி, 2026 நோக்கி என்பதில் மோடி தெளிவாக இருக்கிறார் எனவும் நாங்கள் வேலை செய்து காட்ட வேண்டும் அந்த நம்பிக்கையை மக்களுக்கு கொடுக்க வேண்டும், 1200 கோடி ரூபாயை கொண்டு வர வேண்டும், கோவையை அடிப்படையிலிருந்து மாற்ற வேண்டும் எனவும்  கோவை, திருப்பூர், சென்னை மதுரை, மத்திய பகுதி என பெரிய நகரங்களில் ஏன் நிற்கிறது, ஏன் தனியாக இருபத்தி மூன்று இடங்களில் போட்டியிட வேண்டும் என கூறியவர் மாற்றி காட்டுகிறோம் என சபதம் எடுத்து இருப்பதாக தெரிவித்தார்.

அடியோடு மாற்றி காட்டுகிறோம் என தெரிவித்த அண்ணாமலை, தமிழக மக்களுக்கு வளர்ச்சி என்றால் என்ன?,  முதல் முதலாக அரசு வரும்போது வளர்ச்சி என்ன என்பதை 2024 இல் இருந்து 2026 வரை பார்ப்பார்கள், தமிழக அரசியலில் தான் இருப்பேன் டெல்லி அரசியல் எனக்கு பிடிக்காது அங்கே போக மாட்டேன், தமிழகத்தில் 2026ல் வரவேண்டும் என்றால் இந்த இரண்டு ஆண்டுகள்,  700 நாட்களில்  தமிழகத்தின் வளர்ச்சி என்ன என்பதை காட்டப் போகிறோம் என தெரிவித்தார்.பிரதமர் ஏன் அடிக்கடி தமிழகத்துக்கு வருகிறார் என்றால் 2024 இல் கிடைக்கக்கூடிய எம்பிக்கள் மூலம் சிறப்பு கவனம் செலுத்தப்பட்டு, 2026-ல் ஆட்சி அமைக்க வேண்டும் எனவும், ஆயிரக்கணக்கான கோடி ரூபாயை எம்பிகள் கொண்டுவர இருக்கிறார்கள், சபதம் எடுத்து பாஜக  அந்த 700 நாட்கள் மக்களின் அன்பை பெற்று களப்பணி செய்து 2026 இல் 234 தொகுதிகளிலும் பாஜக வெல்லும் எனவும்  கலாச்சார மாற்றத்திற்கான தேர்தலாக இருக்கும் எனவும் தெரிவித்தார். 

தொடர்ந்து பேசிய அண்ணாமலை திமுகவின் தேர்தல் அறிக்கை தொடர்பாக, திமுகவுக்கு தேர்தல் வருவதும் தேர்தல் அறிக்கை சொன்னவற்றை செய்யாமல் இருப்பதும், அதன் பிறகு அடுத்த தேர்தல், அதே தேர்தல் அறிக்கை, சிலிண்டர் விலை நூறு ரூபாய் என்றால் 500 ரூபாய் என்று போடுவோம், பெட்ரோல் விலை ரூ.3 என்றால் ஐந்து ரூபாய் போடுவோம் என்பார்கள், 2026 தேர்தலில் பெட்ரோல் டீசல் இலவசம் என்பார்கள், வீட்டில் குழாய் அமைப்பு தருவோம், இலவசமாக பெற்று கொள்ளலாம் என்பார்கள் என விமர்சித்த அண்ணாமலை, டாய்லெட் பேப்பர் இல்லை என்றால் திமுகவின் தேர்தல் அறிக்கையை பயன்படுத்துங்கள், வீட்டில் மகளிர் சாமான்கள் வாங்குவது என்றால் திமுகவின் பொட்டலம் கட்டுவதற்கு பயன்படுத்துங்கள் எனவும் விமர்சித்தவர், பாஜக அறிவித்த 295 தேர்தல் வாக்குறுதிகளையும் நிறைவேற்றிவிட்டு என வந்துள்ளதாக தெரிவித்த அண்ணாமலை, தேர்தல் அறிக்கை வந்த பிறகு தெரியும் ஐந்து ஆண்டுகளில் தேர்தல் அறிக்கை நிறைவேற்றுவோம் என தெரிவித்தார். 

தங்களுடைய சண்டை வேட்பாளர்களுடன் இல்லை, தனது பிரச்சாரத்தில் அவர்களின் பெயரைக் கூட பயன்படுத்தப் போவதில்லை, தங்களுடைய சண்டை கோபாலபுரத்தோடு, அறிவாலயத்தோடு, தமிழகத்தின் வளர்ச்சியை யார் தடுத்திருக்கிறார்களோ அவர்களோடு, தன் சண்டை கீழே உள்ளவர்களோடு கிடையாது, கோவையில் மூன்று வேட்பாளர்கள் நிற்கிறார்கள் இந்த தேர்தல் தர்மத்துக்கும் அதர்மத்துக்கும், வளர்ச்சி என்பதற்கான தேர்தல் எனவும் வேட்பாளர்கள் என்ன வேண்டுமானாலும் சொல்லட்டும் அனைத்து வேட்பாளர்கள் மீதும் தனக்கு மரியாதையை உண்டு, கோவை பாராளுமன்ற தொகுதி மக்களுக்கும் தெரியும், அனைத்து அமைச்சர்களும் இங்கு இருப்பார்கள், பணத்தை கொண்டு வருவார்கள், நூற்றுக்கணக்கான கோடி ரூபாயை கோவையில் செலவு செய்வார்கள்,  எனவும் மக்களை நம்பி கோவையில் இருந்து மாற்றம் ஆரம்பம் ஆகிறது என்பதை நம்பி குறைந்த பணம் செலவு செய்த தேர்தலாக கோவை பாராளுமன்ற தேர்தல் இருக்க வேண்டும் என்ற சங்கல்பத்தோடு வந்திருக்கிறேன் என தெரிவித்தார். 

மேலும் கோவை வேட்பாளராக தமிழகத்தின் அரசியல் வரலாற்றில் மக்களுக்கு உண்மையான ஜனாநாயகத்தை காட்ட வேண்டும் என தெரிவித்தவர், தமிழக அமைச்சர்கள் 33 மாதங்களாக சம்பாதித்த பணத்தை கொண்டு வந்து கொட்டுங்கள், முதலமைச்சர் வந்து தங்கட்டும், ஆனால் கோவை மக்கள் ஜூன் நாலாம் தேதி அரசியல் மாற்றத்தை கோவை பாராளுமன்ற தொகுதியிலிருந்து ஆரம்பிப்பார்கள் எனவும் அதுக்கு நான் சாட்சியாக இருப்பேன் என  தெரிவித்தார்.

சௌமியா அன்புமணி சுற்றுச்சூழலில் நிறைய வேலை செய்திருக்கிறார்கள். அனைவரும் அனுபவம் தமிழகத்துக்கு வர வேண்டும். அதன் மூலம் தமிழகத்தின் வளர்ச்சி இருக்க வேண்டும் என சௌமியாவுக்கு தெரிவித்தார். பெரிய திட்டத்தோடு களத்தில் இருக்கிறோம்,அனுபவம், இளமை, வேகம் கொண்ட வேட்பாளர்களை இறக்கி இருக்கிறோம் எனவும் தெரிவித்தவர், பிரதமரின் ரோட் ஷோ நிகழ்ச்சி அந்த பகுதியில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை கொடுக்கப்பட்டிருக்கிறது, விடுமுறை கொடுக்கப்பட்ட பள்ளிகள் தங்களது பிரதமரை காண வேண்டும் என வந்திருக்கிறார்கள் எனவும் விடுமுறை கொடுத்தது நாங்களா? அரசா ? என கேள்வி எழுப்பியவர் விடுமுறை அளித்த பிறகு குழந்தைகள் எங்கே செல்வார்கள் என அப்போது குறிப்பிட்டார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe