இது அ.தி.மு.க., மானத்திற்கு விடுக்கப்பட்ட சவால்- பொள்ளாச்சி ஜெயராமன்...

published 10 months ago

இது அ.தி.மு.க., மானத்திற்கு விடுக்கப்பட்ட சவால்- பொள்ளாச்சி ஜெயராமன்...

கோவை: கோவை சின்னியம்பாளையம் பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் கோவை, பொள்ளாச்சி,நீலகிரி ஆகிய தொகுதிகளில் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் பொள்ளாச்சி ஜெயராமன், அம்மன் அர்ஜுனன், பி.ஆர்.ஜி அருண்குமார், சூலூர் கந்தசாமி உட்பட அதிமுக வேட்பாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

ஷ்காலர் ஷிப்பில் படிக்க DJ Tuition குழுவில் இணையலாம்...

https://chat.whatsapp.com/KR30D92FDtgHxyrSYs10Ms

இந்த நிகழ்ச்சியில் பேசிய பொள்ளாச்சி ஜெயராமன், அண்ணாமலை மட்டுமல்ல எந்த இமயமலை வந்தாலும், திருவண்ணாமலை அருளால் ராமச்சந்திரன் மாபெரும் வெற்றியை பெறுவார் எனவும் அதிமுக வெற்றி வித்தியாசம் குறைவாக இருக்காது என்ற அவர் ஒன்றரை லட்சம் வாக்கு வித்தியாசத்தில் ராமச்சந்திரன் வெற்றி பெறுவார் என தெரிவித்தார். 

ஊட்டியில் உலகத்தின் மிகப்பெரிய ஊழல் மன்னன்,ஆணவம் பிடித்தவரை எதிர்த்து லோகேஷ் நிற்பதாகவும் கொங்கு மண்டலத்தின் ஐந்து பிரதான தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெறும் என்றவர்
இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுவதாக சொன்னவர் சுயேட்சையாக மாறிவிட்டார் என்றார்.
 

தனது உயிர் போய் விடும் எனத் தெரிந்தும் ஜெயலலிதா நம்மை எல்லாம் ஜெயிக்க வைத்தார் எனவும் எம்ஜிஆர்,அம்மா வழியில் இரட்டை இலையை எதிர்க்க எந்த கொம்பாதி கொம்பனாலும் முடியாது என தெரிவித்தார்.நேற்று நமது தொண்டர்கள் இருந்த நிலை வேறு இன்று நமது மானத்திற்கு சவால் வந்துள்ளது எனவும் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சி மீண்டும் அமைய இந்த தேர்தலில் வெல்வது அதிமுகவாக இருக்க வேண்டும் என்றவர் அதிமுக வேட்பாளர்கள் வெல்வது உறுதி எனவும் அவர்கள் டெல்லிக்கு செல்வது உறுதி எனத் தெரிவித்தார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe