கோவையில் அண்ணாமலையை டெபாசிட் இழக்க செய்ய வேண்டும்- ஓய்வு பெற்ற நீதி அரசர் அரி பரந்தாமன்...

published 10 months ago

கோவையில் அண்ணாமலையை டெபாசிட் இழக்க செய்ய வேண்டும்- ஓய்வு பெற்ற  நீதி அரசர்  அரி பரந்தாமன்...

கோவை: கோவை இரயில் நிலையம் அருகில் உள்ள தனியார் அரங்கில் தமிழ்நாடு பொது மேடை அமைப்பின் சார்பில் மோடி ஆட்சி தொடரலாமா? என்ற தலைப்பில் கருத்தரங்கு நடைபெற்றது. இந்த கருத்தரங்கில் உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி அரி பரந்தாமன் கலந்து கொண்டு பேசினார்.

 

அப்போது பேசிய அவர், மோடி ஆட்சி வீழ்த்தப்பட வேண்டுமா என்பது இந்த கருத்தரங்கின் தலைப்பு எனவும் அதற்கான பதில் மோடி ஆட்சி வீழ்த்தப்பட வேண்டும் என்பது தான் என தெரிவித்தார். குறிப்பாக கோவையில் தமிழ்நாட்டுக்கு பாஜக வின் தளபதியாக இருக்கக்கூடிய அண்ணாமலை இங்கு வீழ்த்தப்பட வேண்டும், வீழ்த்தப்படுவது மட்டுமல்ல அவர் டெபாசிட் வாங்காத அளவிற்கு வீழ்த்தப்பட வேண்டும் என தெரிவித்தார். 

சார்புகளற்ற, சமரசமற்ற, நேர்மையான ஊடகத்தை ஆதரிப்பீர் -NewsClouds

ஏனென்றால் தமிழகத்தின் மீது மோடிக்கு சமீப காலமாக காதல் வந்திருக்கிறது எனவும்,  வாரத்திற்கு இரண்டு முறை வருகிறார் மோடி என தெரிவித்த அவர்,
தமிழகத்தில் நவம்பர், டிசம்பர் மாதத்தில் வரலாறு காணாத அளவிற்கு வெள்ள பாதிப்பு ஏற்பட்டிருந்தது, சென்னை ,தூத்துக்குடி மாவட்டங்கள் பாதிக்கப்பட்டு கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள பொருட்களும், பணமும் மனித இழப்புகளும் ஏற்பட்ட பொழுது பிரதமர் மோடி வரவில்லை. மணிப்பூர் மாநிலம் எரிந்து கொண்டு இருக்கிறது என்றார்.

இந்த கருத்தரங்கில் திராவிடர் விடுதலைக் கழக தலைவர் கொளத்தூர் மணி,  தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் கு.இராமகிருட்டிணன் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe