சீமான் வேதனை! கேட்கும் சின்னத்தை எல்லாம் வேறு ஒருவருக்கு கொடுக்கிறார்கள்!

published 10 months ago

சீமான் வேதனை! கேட்கும் சின்னத்தை எல்லாம் வேறு ஒருவருக்கு கொடுக்கிறார்கள்!

சென்னை: நாம் தமிழர் கட்சி மைக் சின்னத்தில் போட்டியிட உள்ளதாக அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார்.

நாம் தமிழர் கட்சி மைக் சின்னத்தில் போட்டியிட உள்ளதாகவும், ஆகப்பெரும் புரட்சியாளர்கள் தங்கள் முழக்கத்தை இந்த கருவியில் தான் முன்வைத்துள்ளதாகவும் சீமான் தெரிவித்துள்ளார்.

சென்னையில் இன்று சீமான் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் கூறியதாவது:

தேர்தல் ஆணையம், சி.பி.ஐ., போன்ற அமைப்புகள் தன்னாச்சி பெற்றது என்று நினைக்க வேண்டாம். அவர்கள் பா.ஜ.க., அரசின் கட்டுப்பாட்டில் செயல்படுகிறார்கள்.

விவசாயி சின்னம் வேறு ஒரு கட்சிக்கு வழங்கப்பட்டுவிட்டது. அந்த கட்சி போட்டியிடவே இல்லை. சின்னத்தில் மட்டுமல்ல உண்மையிலேயே சீமான் விவசாயிதான்.

பா.ஜ.க.,வுடன் கூட்டணி வைத்ததால் டி.டி.வி தினகரனுக்கு குக்கர் கிடைத்துள்ளது. ஜி.கே.வாசனுக்கு சைக்கிள் சின்னம் கொடுத்துள்ளனர். வேறு மாநிலங்களில் சைக்கிள் சின்னம் இல்லையா?

சின்னத்தை வைத்து வென்றுவிடலாம் என்பவர்களை என்ன செய்வது? அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும் என்பதை போல் நேர்மையை கடைபிடித்து, அறம் சார்ந்து நிற்க வேண்டும். இதனை நினைவில் வைத்து தன் வேலை செய்வோம்.

நாம் தமிழர் கட்சி மைக் சின்னத்தில் போட்டியிட உள்ளது. ஆகப்பெரும் புரட்சியாளர்கள் தங்கள் முழக்கத்தை இந்த கருவியில் தான் முன்வைத்தனர்.

கூட்டணி வைத்திருந்தால் கேட்ட சின்னம் கிடைத்திருக்கும்; ஆனால் நான் சமரசம் செய்ய மாட்டேன். தனி மனிதனாக 7% ஓட்டு வாங்கியதால் வியப்படைந்துள்ளனர். அதனால் தான் இப்படி செய்கின்றனர்.

எங்களை உரசினால் பற்றி எரிவோம். எங்களை எரித்துக் கொண்டு உலகத்திற்கு வெளிச்சத்தைக் கொடுப்போம் என்பதை வலியுறுத்த தீக்குச்சி சின்னத்திற்கு விண்ணப்பித்தேன். விண்ணப்பித்த உடனே அந்த சின்னத்தையும் வேறொருவருக்கு கொடுத்துவிட்டார்கள். பார்த்துக் கொள்வோம்.

இவ்வாறு சீமான் பேசினார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe