நாம் தமிழர் கட்சியின் மாற்று வேட்பாளர்களுடன் வந்தவர்களை போலீசார் தடுத்து நிறுத்தியதால் வாக்குவாதம்...

published 10 months ago

நாம் தமிழர் கட்சியின் மாற்று வேட்பாளர்களுடன் வந்தவர்களை போலீசார் தடுத்து நிறுத்தியதால் வாக்குவாதம்...

கோவை: கோவை நாடாளுமன்ற தொகுதிக்கு நாம் தமிழர் கட்சி கோவை மற்றும் பொள்ளாச்சி வேட்பாளர்கள் நேற்று முன்தினம்  வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனர். 

இந்நிலையில் இன்று நாம் தமிழர் கட்சியின் மாற்று வேட்பாளர்கள் இரண்டு பேர் தங்களது வேட்பு மனுவை தாக்கல் செய்ய மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தனர். ஒரு  வேட்பாளருடன் ஐந்து பேர் உள்ளே செல்ல அனுமதி உள்ள நிலையில், மூன்று பேர் மட்டும் உள்ளே செல்ல போலீசார் அனுமதித்ததாகவும்,  வேட்பு மனு தாக்கல் செய்ய தேவையான ஆவணங்களை கொண்டு சென்ற தங்களை தடுத்து நிறுத்தியதாக அக்கட்சியினர் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. 

மேலும் வேட்பு மனு தாக்கல் செய்ய திமுக வேட்பாளர் வருவதற்கு முன்னதாகவே கரைவேட்டி கட்டிய திமுகவினர் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நின்று கொண்டிருக்கும் நிலையில், வேட்பு மனு தாக்கல் செய்ய ஆவணங்களுடன் வந்த தங்களை போலீசார் தடுத்து நிறுத்தியதாக ஆவேசமடைந்தனர். 

இது போன்று உங்களால் பாஜகவினரிடம் கூற முடியுமா என்று காவல்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்  இதனால் ஆட்சியர் அலுவலகம் முன்பு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe