நேரடியாக எதிர்க்க முடியவில்லை என்று வழக்கமான டிராமாவை பிற கட்சிகள் மேற்கொள்கிறார்கள்- கோவையில் அண்ணாமலை பேட்டி...

published 10 months ago

நேரடியாக எதிர்க்க முடியவில்லை என்று வழக்கமான டிராமாவை பிற கட்சிகள் மேற்கொள்கிறார்கள்- கோவையில் அண்ணாமலை பேட்டி...

கோவை: கோவை காளப்பட்டி பகுதியில் இந்து முன்னணி சார்பில் நடைபெற்ற கூட்டத்தில் பாஜக மாநில தலைவரும் கோவை தொகுதி நாடாளுமன்ற  வேட்பாளருமான அண்ணாமலை கலந்து கொண்டார்.

கூட்டம் முடிந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அண்ணாமலை,

அரசியல் கட்சிகள் நேரடியாக களத்தில் எதிர்க்க முடியவில்லை என்று வழக்கமான டிராமாவை வேட்புமனு மூலம் கொண்டு வந்துள்ளார்கள் என்றார். நமது தரப்பில் இருந்து இரண்டு வேட்பு மனுக்களை கொடுத்துள்ளோம் என கூறிய அவர், சீரியல் நம்பர் 15 சீரியல் நம்பர் 27 எனவும்  ஒன்று வந்து India Court fee மற்றும் Indian non judicial என தெரிவித்தார். வேட்புமனு தாக்கல் செய்யும் பொழுதே ஒரு குழப்பம் இருந்தது என தெரிவித்த அவர் ஒன்றை நிராகரித்தால் மற்றொன்று ஏற்றுக்கொள்வார்கள் என்று இரண்டையும் கொடுத்திருந்தோம் என்றார். 

அதனை தொடர்ந்து தேர்தல் நடத்தும் அலுவலர்கள் ஆராய்ந்து ஒரு வேட்பு மனுவை எடுத்துள்ளார்கள் இது ஒரு பெரிய விஷயம் அல்ல ஆனால் எதிர்க்கட்சிகள் களத்தில் எதிர்க்க முடியாமல் வேட்பு மனுவை நிராகரிக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலேயே சுற்றிக் கொண்டிருக்கிறார்கள் என விமர்சித்தார். இது அவர்களின் தோல்வி பயத்தை காட்டுவதாகவும் கூறினார். 

இது அனைத்து தேர்தல்களிலும் நடக்கும் ஒன்றுதான் எனவும் வேட்புமனு பரிசீலனை செய்யும்பொழுது ஒரு அரசியல் கட்சி இவ்வாறு செய்யும் இந்த முறை கோவையில் உச்சபட்சமாக நிராகரித்தே ஆக வேண்டும் என்று சொல்லி தேர்தல் நடத்தும் அதிகாரிகளே விளக்கம் தர வேண்டிய நிலைமைக்கு கொண்டு வந்திருக்கிறார்கள் என்றார்.

எங்களைப் பொறுத்தவரை சீரியல் நம்பர் 15 மற்றும் 27 ஆகிய இரண்டையும் தாக்கல் செய்துள்ளோம் இன்று நம்முடைய வேட்பு மனு ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

முதல் வேட்புமனுவை நான் தாக்கல் செய்தேன். இரண்டாவது வேட்பு மனுவை வேட்பாளர் தாக்கல் செய்ய வேண்டும் என்ற அவசியம் இல்லை எனவும் கூறினார். மேலும் எதிர்க்கட்சிகள் சொல்வது போல் நிராகரிக்க வேண்டிய காரணமும் இது இல்லை என்றார். மேலும் நிராகரிக்க வேண்டும் என்றால் வேண்டுமென்றே ஒரு பொய்யான செய்தியை அவர்கள் கூறி இருக்க வேண்டும் எனவும் தேர்தலைப் பொறுத்தவரை ஒரு காரணம் சொல்லி இதனை நிராகரிப்பது ஒரு காரணம் இல்லை என்றார். 

இதை அரசியல் கட்சிகள் புரியாமல் பேசுகிறார்கள் எனவும் கமா இல்லை, புள்ளியில்லை என்று சொன்னால் கூட நிராகரிக்க வேண்டிய காரணம் அது கிடையாது என்றார். இது குறித்து தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் நீங்கள் கேள்வி எழுப்பலாம் எனவும் அனைத்து விவரங்களும் தேர்தல் நடத்தும் அதிகாரிகளுக்கு தெரியும் எனவும் இதற்கு மேலும் ஏதேனும் விவரங்கள் தெரிய வேண்டுமென்றால் தேர்தல் அதிகாரிகளிடம் கேட்கலாம் என தெரிவித்தார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe