கோவை மக்களே அதிக லாபம் என ஆசை பேச்சை கேட்டு ஏமார்ந்தது போதும்பா! மீண்டும் ஒரு சம்பவம்!

published 10 months ago

கோவை மக்களே அதிக லாபம் என ஆசை பேச்சை கேட்டு ஏமார்ந்தது போதும்பா! மீண்டும் ஒரு சம்பவம்!

 

கோவை: கோவை பீளமேடு லட்சுமிபுரத்தை சேர்ந்தவர் கருணாகரன்(64) (பெயர் மாற்றப்பட்டுள்ளது). சொந்த தொழில் செய்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு இவரது செல்போன் எண்ணுக்கு குறுந்தகவல் வந்தது.

அதில் ஆன்லைன் மூலம் குறும்படங்களுக்கு கருத்துகளை பதிவிட்டு லைக், ஷேர் செய்தால் குறைந்த முதலீட்டில் அதிக லாபம் பெறலாம் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இதனை நம்பி கருணாகரன், அந்த நபர் குறுந்தகவலில் குறிப்பிட்டு இருந்த வங்கி கணக்கில் சிறிய அளவு முதலீடு செய்ததில் கூடுதல் லாபம் கிடைத்தது.

இதனைத்தொடர்ந்து தாமோதரன் பல்வேறு கட்டங்களாக ரூ.15.49 லட்சம் முதலீடு செய்தார். அதன் பின்பு அவருக்கு லாபம் கிடைக்கவில்லை.

முதலீடு செய்த பணத்தையும் திரும்ப பெற முடியவில்லை. இதனைத்தொடர்ந்து கருணாகரன் கோவை மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார்.

புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

NewsClouds ஆசிரியர் குறிப்பு:

ஏற்கனவே ஆயிரக்கணக்கான மக்கள் இது போன்ற மோசடி பேர்வழிகளை நம்பி பலகோடி ரூபாய் இழந்துள்ளனர்.

இப்போது புதிதாக ஒரு கும்பல் ஸ்டேட்டஸ் வைத்தால் சம்பாதிக்கலாம் என்று கூறி வருகின்றனர். இதுவும் மோசடிதான். இந்த மோசடி வலையில் சிக்கிக் கொண்டவர்கள் தான் சிக்கியது மட்டுமல்லாமல், நண்பர்கள் உட்பட மற்றவர்களுக்கும் ஆசை வார்த்தை காட்டி அவர்களையும் மோசடி வலையில் விழ வைத்து, அதன் மூலம் தான் முதலீடு செய்த பணத்தையாவது ஈட்டிக்கொள்ள நினைத்து, பெரும் பாவத்தை அவர்களை அறியாமலே செய்து வருகின்றனர்.

இது குறித்து நியூஸ் க்ளவுட்ஸ் செய்தி தளம் தொடர்ச்சியாக செய்திகளை பதிவு செய்து கொண்டே இருக்கிறது. ஆனாலும், ஏமாற்றப்படும் சம்பவங்கள் குறைந்தபாடில்லை.

நீங்கள் இதுபோல் சந்தேகத்திற்குரிய வகையில் முதலீடுகள் ஏதேனும் செய்திருந்தால் உடனடியாக நிறுத்துங்கள். நீங்கள் மிரட்டப்பட்டால் உடனடியாக உங்களது செல்போனை அணைத்து வைத்து விட்டு, கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் செயல்படும் சைபர் கிரைம் போலீசாருக்கு தகவல் தெரிவியுங்கள்.

நீங்கள் கோவை புறநகர் பகுதியில் வசிப்பவராக இருந்தால் உடனடியாக கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் செயல்படும் சைபர் கிரைம் பிரிவில் புகார் தெரிவியுங்கள்.

ஒருவேளை நீங்கள் எதிர்பார்த்த உதவி உங்களுக்கு கிடைக்கவில்லை என்றால் உடனடியாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு (தொலைபேசி எண் 100ஐ) தொடர்பு கொள்ளுங்கள்.

உழைப்பின்றி உயர்வில்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள். அப்படி குறைந்த முதலீடு அதிக லாபம் என்ற ஒரு திட்டம் உண்மையாக இருந்திருந்தால், உலக மக்கள் அனைவரும் உழைப்பதை நிறுத்திவிட்டு, குடும்பத்தினருடன் அல்லது விருப்பமான நபர்களுடன் உலகை இன்பமாக வலம் வந்து கொண்டிருப்பார்கள்.

உழைத்து சிறுக, சிறுக சேமித்த பணத்தை இழப்போரின் மனநிலையை நேரடியாக பார்த்து உணர்ந்துள்ளோம். கவனமாக இருங்கள் மக்களே.

இதனை விழிப்புணர்வு செய்தியாக எண்ணி அனைவருக்கும் பகிர்ந்து, நம் மக்கள் நஷ்டமடைந்து,  மன உளைச்சளுக்கு ஆளாவதை தடுத்திடுங்கள்.

செய்தி குறித்த உங்கள் கருத்துக்கள், சந்தேகங்களை எங்களது whatsapp எண்ணிற்கு தனிப்பட்ட முறையில் அனுப்பலாம், விரைவில் உங்களுக்கு பதில் தர முயற்சிக்கிறோம். 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe